புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 394
என்றும் செல்லேன்!
என்றும் செல்லேன்!
பாடியவர் :
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் :
சோழிய ஏனாதி திருக்குட்டுவன்.
திணை :
பாடாண்.
துறை :
கடைநிலை.
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன்,
வலி துஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்,
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்,
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்! . . . . [05]
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றிப்,
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக,
அக மலி உவகையொடு அணுகல் வேண்டிக், . . . . [10]
கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன், அஞ்சி
யான் அது பெயர்த்தனென் ஆகத், தான் அது
சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும் ஓர்
பெருங்களிறு நல்கியோனே, அதற்கொண்டு, . . . . [15]
இரும்பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும்,
துன்னரும் பரிசில் தரும் என
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே.
பொருளுரை:
விற்பயிற்சியால் உயர்ந்த, சந்தனம் பூசப்பட்ட மார்பினையுடைய, தழைத்த கதிர்களை உடைய வயல்களைக் கொண்ட வெண்குடை என்ற ஊரின் தலைவனான வலிமையுடைய பெரிய கைகளையும் குறி தப்பாத வாளையுமுடைய திருக்குட்டுவன் வள்ளன்மை உடையவன் என்று உலக மக்கள் புகழ்ந்தாலும், அவனை நினைத்தலைக் கைவிடுவீர்களாக, உயர்ந்த கருத்துக்கள் அமைந்த சொற்களையுடைய புலவர்களே!
நானும், இருளும் நிலவும் கழிந்த அதிகாலையில் ஒரு கண்ணையுடைய கிணைப் பறை ஒலிக்குமாறு இசைத்து, ஒலி ஒலிக்கின்ற முரசினையும் இயற்றிய தேரினையும் உடைய அவனுடைய தந்தையின் புகழை வஞ்சித் துறையில் பாடினேன் ஆக, அவன் தன் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் தன்பால் நான் நெருங்கி இருக்க வேண்டி, பகைவரைக் கொன்றும் சினம் தணியாத புலவு நாற்றமுடைய தந்தங்களையுடைய யானை ஒன்றை எனக்கு ஈந்தான். அச்சம் கொண்டு நான் விலகினேன் ஆக, தான் கொடுத்தது சிறிது என்று உணர்ந்து நாணம் அடைந்தவனாக, அதைவிடப் பெரிய களிற்று யானையை எனக்கு ஈந்தான். அதன் பின்னர், என்னுடைய மிகப் பெரிய சுற்றத்தாருடன் நான் பெரிய துன்பத்தை அடைந்தாலும், நெருங்க முடியாத பரிசைத் தருவான் அவன் என்று, நான் எப்பொழுதும் செல்லமாட்டேன், மலைகள் பொருந்திய அவனுடைய நாட்டிற்கு.
குறிப்பு:
இரும்பேர் ஒக்கல் - நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 - கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை - புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 - மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 - கரிய பெரிய சுற்றத்தார், பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை - அகநானூறு 301 - மிகப் பெரிய சுற்றத்தார்.
சொற்பொருள்:
சிலை உலாய் நிமிர்ந்த - விற்பயிற்சியால் உயர்ந்த, சாந்துபடு மார்பின் - சந்தனம் பூசப்பட்ட மார்பினையுடைய, ஒலி கதிர்க் கழனி - தழைத்த கதிர்களை உடைய வயல்கள், வெண்குடைக் கிழவோன் - வெண்குடை என்ற ஊரின் தலைவன், வலி துஞ்சு தடக்கை - வலிமையுடைய பெரிய கைகள், வாய்வாள் குட்டுவன் - குறி தப்பாத வாளையுடைய திருக்குட்டுவன், வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் - வள்ளன்மை உடையவன் என்று உலக மக்கள் புகழ்ந்தாலும், உள்ளல் ஓம்புமின் - நினைத்தலை கைவிடுவீர்களாக, உயர் மொழிப் புலவீர் - உயர்ந்த சொற்களையுடைய புலவர்களே, யானும் - நானும், இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை - இருளும் நிலவும் கழிந்த அதிகாலை, ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி - ஒரு கண்ணையுடைய கிணைப் பறை ஒலிக்குமாறு இசைத்து, பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினேன் ஆக - ஒலி ஒலிக்கின்ற முரசினையும் இயற்றிய தேரினையும் உடைய அவனுடைய தந்தையின் புகழை வஞ்சித் துறையில் பாடினேன் ஆக, அக மலி உவகையொடு - உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியுடன், அணுகல் வேண்டி - தன்பால் நெருங்க வேண்டி, பகைவரைக் கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கினன் - எனக்கு கொன்றும் சினம் தணியாத புலவு நாற்றமுடைய தந்தங்களையுடைய யானை ஒன்றை எனக்கு ஈந்தான், அஞ்சி யான் அது பெயர்த்தனென் ஆக - அச்சம் கொண்டு நான் விலகினேன் ஆக, தான் அது சிறிதென உணர்ந்தமை நாணி - அவன் அது சிறிது என்று உணர்ந்து நாணம் அடைந்து, பிறிதும் ஓர் பெருங்களிறு நல்கியோனே - அதைவிட பெரிய களிற்று யானையை எனக்கு ஈந்தான், அதற்கொண்டு - அதன் பின்னர், இரும்பேர் ஒக்கல் - மிகப் பெரிய சுற்றத்தாருடன், பெரும் புலம்பு உறினும் - பெரிய துன்பத்தை அடைந்தாலும், துன்னரும் பரிசில் தரும் என - நெருங்க முடியாத பரிசு தருவான் என்று, என்றும் செல்லேன் - எப்பொழுதும் செல்லவில்லை, அவன் குன்று கெழு நாட்டே - மலைகள் பொருந்திய அவனுடைய நாட்டிற்கு.