புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 389
நெய்தல் கேளன்மார்!
நெய்தல் கேளன்மார்!
பாடியவர் :
கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன் :
ஆதனுங்கன்.
திணை :
பாடாண்.
துறை :
இயன்மொழி.
கான வேம்பின் காய் திரங்கக்,
கயங் களியும் கோடை ஆயினும்,
ஏலா வெண்பொன் போகுறு காலை,
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்! . . . . [05]
என்றுஈத் தனனே, இசைசால் நெடுந்தகை;
இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்;
செலினே, காணா வழியனும் அல்லன்;
புன்தலை மடப்பிடி இனையக், கன்றுதந்து,
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும், . . . . [10]
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்!
ஆத னுங்கன் போல, நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட,
வீறுசால் நன்கலம் நல்குமதி, பெரும! . . . . [15]
ஐதுஅகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார், நெடுங்கடை யானே!
பொருளுரை:
வியாழம் (வெண்பொன்) போர் புரியும் காலத்தில், நுங்கு விளையும் காலத்தில், வேம்பு காய்க்கும் காலத்தில், குளம் நீர் குறைந்து களிமண் ஆகும் காலத்தில் நிலம் வறண்டுபோகும். அந்தக் காலத்தில் சிறுபிள்ளை போன்ற பொருநனாகிய புலவன் என்னை நினைப்பானோ மாட்டானோ என்று நினைத்துப் பார்த்து முதியன் ஆதனுங்கன் முன்கூட்டியே மிகுந்த பொருள்களை வழங்கினானாம். ஒரு நாளில் சென்றடையும் வழித்தூரத்தில் அவன் இருப்பிடம் இல்லை. சென்றால் காணமுடியாதவனும் அல்லன். பெண்யானை வருந்தும்படி அதன் கன்றுகளைப் பிடித்துவந்து ஊர் மன்றத்தில் கட்டும் குன்றக ஊர்களைக் கொண்ட வேங்கட நாட்டு மன்னன் ஆதனுங்கன். அவன் புகழ் பெற்ற நெடுந்தகை. முதியன் ஆதனுங்கன் என்பது அவன் பெயர். பெருமானே இந்த ஆதனுங்கன் போல நீயும் எனக்குப் பெருமை மிக்க பொருள்களை வழங்கவேண்டும். என் வீட்டு மகளிர் நெய்தல் - பண் (ஒப்பாரி) ஒலியை நீ கேளாமல் இருக்கவேண்டும் அல்லவா?