புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 366
மாயமோ அன்றே!
மாயமோ அன்றே!
பாடியவர் :
கோதமனார்.
பாடப்பட்டோன் :
தருமபுத்திரன்.
திணை :
பொதுவியல்.
துறை :
பெருங்காஞ்சி.
குறிப்பு :
இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.
விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக,
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப,
ஒருதா மாகிய பெருமை யோரும்,
தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே; . . . . [05]
அதனால், அறிவோன் மகனே! மறவோர் செம்மால்!
.. .. .. .. .. .. .. .. உரைப்பக் கேண்மதி;
நின் ஊற்றம் பிறர் அறியாது,
பிறர் கூறிய மொழி தெரியா,
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, . . . . [10]
இரவின் எல்லை வருவது நாடி,
உரை .. .. .. .. .. .. .. .. .. .. ..
உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்,
செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ,
அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப, . . . . [15]
கெடல் அருந் திருவ .. .. .. .. .. ..
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,
நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக், . . . . [20]
காவு தோறும் .. .. .. .. .. .. .. ..
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக,
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப,
ஒருதா மாகிய பெருமை யோரும்,
தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே; . . . . [05]
அதனால், அறிவோன் மகனே! மறவோர் செம்மால்!
.. .. .. .. .. .. .. .. உரைப்பக் கேண்மதி;
நின் ஊற்றம் பிறர் அறியாது,
பிறர் கூறிய மொழி தெரியா,
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, . . . . [10]
இரவின் எல்லை வருவது நாடி,
உரை .. .. .. .. .. .. .. .. .. .. ..
உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்,
செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ,
அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப, . . . . [15]
கெடல் அருந் திருவ .. .. .. .. .. ..
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,
நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக், . . . . [20]
காவு தோறும் .. .. .. .. .. .. .. ..
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.
பொருளுரை:
உன் வலிமை [ஊற்றம்] பிறருக்குத் தெரியாதவாறு பார்த்துக்கொள். பிறர் சொல்வதை நன்றாக விளங்கிக்கொள். பகலெல்லாம் உழைப்பவர்களுக்கு உதவி செய்.இரவில் மறுநாள் வரப்போகும் நிகழ்வுகளை எண்ணிப்பார். உழுத மாடு (நெல்லை உழுதவனுக்குத் தந்துவிட்டு) வைக்கோலைத் தான் உண்பது போல நடந்துகொள். ஊடல் கொள்ளும் மகளிரோடு கூடி வாழ். அவர்கள் கிண்ணத்தில் ஊற்றித் தரும் தேறல் நீரைப் பருகு. நீ அழியாத செல்வத்தை உடையவன். வாய் மடுத்து உண்ணும் சுவைநீர் வேண்டுபவர்களுக்கு அதனைக் கொடு. சோறு [அவிழ்] வேண்டுபவர்களுக்குச் சோறு கொடு. ஆடு மாடு வெட்டிச் சுட்டுக் கொடு. நீர்நிலையை அடுத்த மணல்வெளி எங்கும் இப்படிக் கொடு. அங்குதான் மக்கள் வருவர். இது செய்யவேண்டிய மாயமந்திரம் அன்று கடமை.