புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 364

மகிழகம் வம்மோ!


மகிழகம் வம்மோ!

பாடியவர் :

  கூகைக் கோரியார்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  பெருங்காஞ்சி.

வாடா மாலை பாடினி அணியப்,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்,
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை . . . . [05]

நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் . . . . [10]

முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.

பொருளுரை:

பெரும! உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும் மகிழலாம் வருக, பெரும. இறந்தவரைத் தாழியிலிட்டுப் புதைக்கும் பொருங்காட்டுக்குப் போன பின்னர் துய்க்க முடியாது. எனவே இருக்கும்போதே துய்த்து மகிழலாம் வருக. பெருங்காடு நிலம் பிளக்கும்படிப் பல வேர்களை விட்டு முதிர்ந்திருக்கும் மரப் பொந்தில் இருந்துகொண்டு கூகைக்கோழி (பெண் - ஆந்தை) குழறும் பெருங்காடு. ஈதல் வாடாத பொன்மாலையைப் பாடினி அணியும்படித் தருவோம். கேணியில் பூக்காத பொன்னாலான தாமரையைப் பாணன் அணிந்துகொள்ளும்படித் தருவோம். உண்ணல் செவ்வாயில் நாக்குப் பிறழும்படி நறவு உண்போம். தின்னல் ஆட்டுக்கடாவைத் தீயில் சுட்டு உடல் கனிந்திருக்கும் நிலையில் அதன் கறித்துண்டுகளைக் கடித்துத் தின்போம்.