புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 356
காதலர் அழுத கண்ணீர்!
காதலர் அழுத கண்ணீர்!
பாடியவர் :
தாயங்கண்ணனார்.
திணை :
காஞ்சி.
துறை :
பெருங்காஞ்சி.
பாடல் பின்னணி:
உலகத்து மக்கள் எல்லாம் முடிவில் அடையும் இடம் சுடுகாடு. அச்சுடுகாடு தான் இறுதியில் வெற்றி அடைகின்றது. சுடுகாற்றை வென்றவர்கள் யாருமில்லை என்பதைப் புலவர் கதையங்கண்ணனார் அழகாக விவரிக்கின்றார் இந்தப் பாடலில். ‘உலகை ஆளும் பெரு மணிமுடி மன்னனும் முடிவில் ஒரு பிடிச்சாம்பலே’ என்ற வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை விளக்கும் பாடல் இது.
பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு,
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் . . . . [05]
என்பு படு சுடலை வெண்ணீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே!
பொருளுரை:
பரந்த களர் நிலத்தில் கள்ளி முளைத்துள்ளது. பகல் பொழுதில் கூவும் ஆந்தைகளாலும், பிணத்தை எரிக்கும் தீயின் ஒளியாலும், அகன்ற வாயையுடைய பேய் மகளிராலும், இந்தப் புகை தவழும் சுடுகாடு காண்போர்க்கு அச்சத்தைத் தருகின்றது. மனத்தால் விரும்புபவர்கள் அழுது சொரியும் கண்ணீர் எலும்புகள் கிடக்கும் சுடுகாட்டுச் சாம்பல் தீயை அடக்குகின்றது. எல்லோருடைய முதுகையும் கண்டு, உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் முடிவிடமாய் விளங்கும் இந்தச் சுடுகாட்டின் முதுகைக் காணும் வல்லவரை இதுவரை இந்தச் சுடுகாடு கண்டதில்லை.
குறிப்பு:
இந்தப் பாடல் ‘மகட்பாற் காஞ்சி’ என்னும் துறையைச் சார்ந்தது என்று ஔவை துரைசாமிப் பிள்ளையின் உரை கூறுகின்றது. ஆனால் இந்தப் பாடலில் மகளைக் கேட்டு வருவதோ, தர மறுப்பதோ இல்லை. இது நிலையாமையைக் கூறும் பெருங்காஞ்சியாகத் தான் இருக்கக்கூடும். இதை அடுத்து வரும் 8 பாடல்களும் நிலையாமையைக் கூறும் பெருங்காஞ்சித் துறையைச் சார்ந்தவை.
சொற்பொருள்:
களரி - உவர் நிலமுடைய காடு, பரந்து - பரந்து, படர்ந்து, கள்ளி - கள்ளிச் செடி, போகி - மிகுந்து, பகலும் - பகலிலும், கூஉம் - கூவும் (இன்னிசை அளபெடை), கூகையொடு - ஆந்தையோடு, பேழ் வாய் - அகன்ற வாயையுடைய, ஈம விளக்கின் - பிணம் எரியும் தீயாகிய விளக்காலும், பேஎய் மகளிரொடு - பேய் மகளிரோடு (பேஎய் - அளபெடை), அஞ்சு வந்தன்று - அச்சம் வரச்செய்யும், இம் மஞ்சுபடு - இந்த புகை தவழும் (இங்கு மஞ்சு என்பது புகையைக் குறிக்கின்றது), முது காடு - சுடுகாடு, நெஞ்சு அமர் காதலர் - மனம் விரும்பும் காதலர்கள், அழுத கண்ணீர் - அழுததால் வந்த கண்ணீர், என்பு படு - எலும்புகள் கிடக்கும், சுடலை - சுடுகாடு, வெண்ணீறு - சாம்பல், அவிப்ப - அடக்க, எல்லார் - எல்லோருடைய, புறனும் - முதுகும், தான் கண்டு - தான் கண்டு, உலகத்து - உலகத்தில் உள்ள, மன்பதைக் கெல்லாம் - மக்களுக்கெல்லாம், தானாய் - தானே முடிவிடமாய், தன் புறம் - தன் முதுகு, காண்போர்க் காண்பு - காண்பவரைக் காண்பது, அறியாதே - அறியாது (ஏகாரம் அசைநிலை)