புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 354
நாரை உகைத்த வாளை!
நாரை உகைத்த வாளை!
பாடியவர் :
பரணர்.
திணை :
காஞ்சி.
துறை :
மகட்பாற் காஞ்சி.
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்,
வயல் அமர் கழனி வாயில் பொய்கைக்
கயல் ஆர் நாரை உகைத்த வாளை . . . . [05]
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும்
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ,
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை
வீங்கு இறைப் பணைத்தோள் மடந்தை
மான் பிணையன்ன மகிழ் மட நோக்கே? . . . . [10]
பொருளுரை:
வேந்தர்கள் போரிட வந்தாலும், அடங்காதவன் இவளுடைய தந்தை. ஒழுங்காகக் காம்புடன் பொருந்திய வேலை நீராட்டுவதற்குப் போரில் சிறந்த வீரர்கள் கூடியவுடன், அவர்களை நீர்நிலைக்குச் செல்லுவதற்கு விடுக்கின்றான். வயல்கள் பொருந்திய கழனி வாயிலில் உள்ள குளத்தில், கயல் மீனை உண்ணும் நாரைகளால் துரத்தப்பட்ட வாளை மீனை நீராடும் பெண்கள் தங்களுடைய செல்வமுடைய இல்லங்களுக்குக் கொண்டு செல்வார்கள் இந்த ஊரில். இந்த ஊர் தன்னுடைய அழகை இழந்துவிடுமோ, தேமல் படர்ந்த, அழகான, உயர்ந்த, நிமிர்ந்த இள முலைகளையும், பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலும் தோளையுடைய இளம் பெண்ணின் பெண் மானைப் போன்ற மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வையினால்?
சொற்பொருள்:
அரைசு தலைவரினும் - வேந்தர்கள் போரிட வந்தாலும், அடங்கல் ஆனா - அடங்குதல் அமையாது, நிரை காழ் எஃகம் - ஒழுங்காக காம்புடன் பொருந்திய வேல், நீரின் மூழ்க - நீராட்டுவதற்கு, புரையோர் - போர் வீரர்கள், சேர்ந்தென - கூடியவுடன், தந்தையும் பெயர்க்கும் - செல்லுவதற்கு விடுக்கின்றான் தந்தை, வயல் அமர் கழனி வாயில் - வயல்கள் பொருந்திய கழனி வாயில், பொய்கை - குளம், கயல் ஆர் நாரை உகைத்த வாளை - கயல் மீனை உண்ணும் நாரைகளால் துரத்தப்பட்ட வாளை மீன், புனலாடு மகளிர் - நீராடும் பெண்கள், வள மனை ஒய்யும் - செல்வமுடைய இல்லங்களுக்குக் கொண்டு செல்லும், ஊர் கவின் இழப்பவும் - ஊர் அழகை இழப்பதும், வருவது கொல்லோ - வருமோ (கொல்லோ - ஓகாரம் அசைநிலை), சுணங்கு அணிந்து - தேமல் படர்ந்து, எழிலிய - அழகான, அணந்து ஏந்து இள முலை - உயர்ந்த நிமிர்ந்த இள முலைகள், வீங்கு இறைப் பணைத்தோள் மடந்தை - பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலும் தோளையுடைய இளம் பெண், மான் பிணையன்ன மகிழ் மட நோக்கே - பெண் மானின் மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வை (நோக்கே - ஏகாரம் அசைநிலை)