புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 352
தித்தன் உறந்தை யன்ன!
தித்தன் உறந்தை யன்ன!
பாடியவர் :
பரணர்.
திணை :
காஞ்சி.
துறை :
மகட்பாற் காஞ்சி.
சிறப்பு :
தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம்.
குறிப்பு :
இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.
வீ .. .. .. .. .. .. .. .. .. கறக்குந்து;
அவல் வகுத்த பசுங் குடையான்,
புதன் முல்லைப் பூப்பறிக் குந்து;
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் . . . . [05]
குன்றுஏறிப் புனல் பாயின்
புறவாயால் புனல்வரை யுந்து;
.. .. .. .. .. .. .. நொடை நறவின்
மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் நன்கலம் . . . . [10]
கொடுப்பவும் கொளாஅ னெ.. ..
.. .. .. .. .. ர்தந்த நாகிள வேங்கையின்,
கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும்
சிறுகோல் உளையும் புரவி .. .. .. .. .. . . . . [15]
.. .. .. .. .. .. .. .. .. .. .. .. யமரே.
பொருளுரை:
தித்தன் ஆளும் உறையூரில் உள்ள வளம் போல நல்ல நல்ல பொருள்களை அவளுக்கு விலையாகத் தந்தாலும் அவளது தந்தை அவற்றைப் பெற்றுக்கொண்டு அவளை வேந்தர்க்குத் தரமாட்டான். தேஏம் என்னும் இன்சுவை நீரைப் பருகிய பின்னர் காலியாக [வெண்] உள்ள மண்கலத்தில் உறையூர் மக்கள் பாலைக் கறப்பர். குழியாகச் செய்த பனைமட்டைப் பச்சைக் குடையில் புதராகப் பூத்திருக்கும் முல்லைப் பூவை அவர்கள் பறிப்பர். ஆம்பல் மலர்க்கொடியை கையின் தோளில் அணிந்துகொண்டிருக்கும் மகளிர் குன்று போன்ற மேட்டில் ஏறி ஆற்றுப் புனலில் பாயும்போது அந்த நீர் ஆற்றங்கரையில் அலைமோதும். பெருங் கொடைவள்ளல் தித்தன் என்னும் வேந்தனுக்கு உரியது உறையூர். அங்கு நறவுச் சுவைநீர் விற்கப்படும். வெண்ணெல் விளைந்திருக்கும் வயல்கள் வேலியாக அமைந்திருக்கும் ஊர் அது. இந்த ஊர் போன்ற பெருஞ்செல்வத்தைத் தந்தாலும் அவள் தந்தை அவளுக்குப் பரிசவிலையாகப் பெற்றுக்கொள்ள மாட்டான். அவள் முலை மாக்கண் - மேளம் போல மலர்ந்திருக்கும். அதில் பல சுணங்குப் பொலிவுச் சுருக்கங்கள் இருக்கும். அதனால் அது இளமை நலத்துடன் திகழும் வேங்கை - மரம் போலக் காணப்படும். அவள் தந்தையும், அண்ணனும் சாட்டைக் கோல் வைத்துக்கொண்டு குதிரையில் செல்வர்.