புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 349
ஊர்க்கு அணங்காயினள்!
ஊர்க்கு அணங்காயினள்!
பாடியவர் :
மதுரை மருதன் இளநாகனார்.
திணை :
காஞ்சி.
துறை :
மகட்பாற் காஞ்சி.
பாடல் பின்னணி:
மகட்பாற் காஞ்சி என்பது ‘உன் மகளைத் தா’ என்று ஒரு இளம் பெண்ணின் தந்தையிடம் ஒரு மன்னர் கேட்பது. அந்தப் பெண்ணின் தந்தையும் அண்ணன்மாரும் மறுக்கும்பொழுது மன்னன் போரிட வருவான். அவளின் தந்தையும் அண்ணன்மாரும் துணிவுடன் மன்னனுடன் போரிடுவார்கள். ஊரில் உள்ள மக்கள் துன்பத்தில் ஆழ்வார்கள் - அவர்களுடைய நீர் நிலைகள் மன்னனின் யானைகளால் பாழ்படும். அவர்களின் மரங்களில் யானைகள் கட்டப்படுவதால் அவை சாயும். இந்தத் துறையில் மொத்தம் 20 பாடல்கள் உள்ளன (புறநானூறு 336 - 355).
கடிய கூறும் வேந்தே, தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே,
இஃது இவர் படிவம் ஆயின், வை எயிற்று,
அரி மதர் மழைக்கண், அம் மா அரிவை, . . . . [05]
மரம் படு சிறு தீப் போல,
அணங்காயினள், தான் பிறந்த ஊர்க்கே.
பொருளுரை:
வேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து அஞ்சத்தக்க மொழிகளை மன்னன் கூறுகின்றான். இவளுடைய தந்தையும் பெரிய சொற்களைக் கூறுகின்றானே தவிரப் பணிவானச் சொற்களைக் கூறவில்லை. இது தான் இவர்களின் கொள்கை. ஆராய்ந்து பார்த்தால், விறகை கடைவதால் தோன்றும் தீ விறகையே அழிப்பது போல, கூர்மையான பற்களையும், செவ்வரி படர்ந்த செருக்கான ஈரமான கண்களையும் உடைய அழகிய கருமை நிறமுடைய இந்த இளம் பெண், தான் பிறந்த ஊருக்கு வருத்தம் விளைவிப்பவள் ஆனாள்.
குறிப்பு:
துடையா - துடைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.
சொற்பொருள்:
நுதி வேல் கொண்டு - வேலின் கூரிய இலையால், நுதல் வியர் துடையா - நெற்றி வியர்வையைத் துடைத்து, கடிய கூறும் வேந்தே - அஞ்சத்தக்க மொழிகளை மன்னன் கூறுகின்றான் (வேந்தே - ஏகாரம் அசைநிலை), தந்தையும் நெடிய அல்லது பணிந்து மொழியலனே - இவளுடைய தந்தையும் பெரிய சொற்களைக் கூறுகின்றானே தவிர பணிவானச் சொற்களைக் கூறவில்லை (மொழியலனே - ஏகாரம் அசைநிலை), இஃது இவர் படிவம் - இது தான் இவர்களின் கொள்கை, ஆயின் - ஆராய்ந்து பார்த்தல், வை எயிற்று - கூர்மையான பற்களையுடைய (எயிறு - பல்), அரி மதர் மழைக்கண் - செவ்வரி படர்ந்த செருக்கான ஈரக் கண்கள், அம் மா அரிவை - அழகிய கருமையான இளம் பெண், மரம் படு சிறு தீப் போல - விறகை கடையும் பொழுது தோன்றும் தீ விறகையே அழிப்பது போல, அணங்காயினள் - வருத்தம் விளைவிப்பவள் ஆகினாள், தான் பிறந்த ஊர்க்கே - தான் பிறந்த ஊருக்கு (ஊர்க்கே - ஏகாரம் அசைநிலை)