புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 348
பெருந்துறை மரனே!
பெருந்துறை மரனே!
பாடியவர் :
பரணர்.
திணை :
காஞ்சி.
துறை :
மகட்பாற் காஞ்சி.
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்,
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்,
கள்ளரிக்கும் குயம், சிறுசின்
மீன் சீவும் பாண் சேரி,
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, . . . . [05]
குவளை உண்கண் இவளைத், தாயே
ஈனா ளாயினள் ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,
செந்நுதல் யானை பிணிப்ப,
வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே . . . . [10]
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்,
கள்ளரிக்கும் குயம், சிறுசின்
மீன் சீவும் பாண் சேரி,
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, . . . . [05]
குவளை உண்கண் இவளைத், தாயே
ஈனா ளாயினள் ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,
செந்நுதல் யானை பிணிப்ப,
வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே . . . . [10]
பொருளுரை:
நெல் அறுக்கும்போது தண்ணுமை - மேளம் கொட்டுவர். அதன் ஓசை அதிர்வால் கண்ணகன்ற பனைமடலில் கட்டியிருந்த தேன்கூடு கிழியும். அதில் ஒழுகும் தேன் - கள்ளைப் பானையில் பிடித்துக்கொள்வர். அங்குள்ள வீடுகளில் வயலில் பிடித்த மீன்களின் செதிளைச் சீவுவர். இப்படிப்பட்ட நன்செய் - நில வளம் மிக்க ஊர் ஊணூர் [ஊண் = உணவு]. அதன் அரசன் தழும்பன். தழும்பன் சொன்னசொல் தவறாமல் வழங்குபவன். அவள் அவள் குவளை மலரைத் தின்பது போல அழகான கண் கொண்டவள். இவளை இவளது தாய் பெற்றிருக்காவிட்டால் இங்கே இது நிகழாதே! ஊரிலுள்ள நிழலிலெல்லாம் தேர்கள் நிற்கின்றனவே! மேலும் அங்குள்ள துறைகளில் உள்ள மரங்கள் எல்லாம், குருதியால் செந்நிறம் கொண்ட யானைகள் கட்டப்பட்டு மரங்கள் வருந்துகின்றனவே! இனி நிகழப்போகும் போர் மூளாமல் இருக்குமே!