புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 347

வேர் துளங்கின மரனே!


வேர் துளங்கின மரனே!

பாடியவர் :

  கபிலர்.

திணை :

  காஞ்சி.

துறை :

  மகட்பாற் காஞ்சி.

குறிப்பு :

  இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.

உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் பறேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை,
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்.
மணநாறு மார்பின், மறப்போர் அகுதை . . . . [05]

குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப,
.. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ..
என்னா வதுகொல் தானே? .. .. .. .. .. .. ..
விளங்குறு பராரைய வாயினும், வேந்தர் . . . . [10]

வினைநவில் யானை பிணிப்ப,
வேர்துளங் கினநம் ஊருள் மரனே.

பொருளுரை:

கூடல் நகரம் போல அவளுக்குக் கூந்தல் தழைத்திருந்தது. வளரும் முலை சிவந்திருந்தது. இது என்ன ஆகுமோ தெரியவில்லையே. நம் ஊர் மரங்கள் பருத்த அடிமரங்களை உடையனவாக இருப்பினும் வேந்தர் தம் போர்யானைகள் கட்டப்பட்டு ஆட்டம் கொள்கின்றனவே. கூடல் நகரம் இதனை மதுரை என்று புறநானூற்றுப் பழைய உரை குறிப்பிடுகிறது. அகுதை இதன் அரசன். இவனை ஒரு வள்ளல் என்று புறநானூற்றுப் பழைய உரை குறிப்பிடுகிறது. கூடல் நகரைச் சுற்றி ஆழமான அகழி இருந்தது. அகுதை கள் உண்டான். அப்போது அவன் தான் உண்ணும் கள்ளில் சிறிது நாவில் ஊற்றியவுடனே நாக்கானது பல தேர் வருவது போலக் குழறி ஆடியது. ஒளிறும் அதன் ஒளி வாடியது. போர்க்கோலம் பூண்டு அவன் சூடிய தும்பைப் பூ வாடியது. அவன்மீது பகைவர் வேல் வீசினர். அது அவன் மார்பில் பட்டு அதன் கூராக்கப்பட்ட முனை முறிந்துபோயிற்று. வேல் வீச்சால் குழைந்துபோன அவன் மார்பில் அணிந்திருந்த தும்பைப் பூவின் அவன் மார்பில் கமழ்ந்தது. இத்தகைய அகுதையின் கூடல் நகரம் அது.