புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 345
பன்னல் வேலிப் பணை நல்லூர்!
பன்னல் வேலிப் பணை நல்லூர்!
பாடியவர் :
அடைநெடுங் கல்வியார்.
பாடப்பட்டோன் :
பெயர் தெரியவில்லை.
திணை :
காஞ்சி.
துறை :
மகட்பாற் காஞ்சி (திணை: வாகையும், துறை: மூதின் முல்லையும் கூறப்படும்).
தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு;
மா மறுகலின் மயக்குற்றன, வழி;
கலங் கழாஅலின், துறை கலக்குற்றன;
தெறல் மறவர் இறை கூர்தலின், . . . . [05]
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்,
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை, . . . . [10]
மையல் நோக்கின், தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன்னை மாரே
செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி,
நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் எனக்;
கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர், . . . . [15]
குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினும், அன்னோ!
என்னா வதுகொல் தானே
பன்னல் வேலிஇப் பணைநல் லூரே! . . . . [20]
பொருளுரை:
வேந்தர் அவளை விரும்புகின்றனர். அவளது தந்தை வேந்தர் தரும் செல்வத்தை விரும்பவில்லை. தனக்கு நிகரான போராளிக்குத் தன் மகளை மணம் முடித்துத் தரவே விரும்புகிறான். எனவே போர் மூண்டுள்ளது. பனைமரக் கருக்குமட்டை வேலி [பன் நல் வேலி] கொண்ட அவள் ஊர் என்ன ஆகுமோ? படையுடன் வந்திருக்கும் புதியவர்கள் பலர். போர்யானைகள் தழுவுவதால் காடே கலகலத்துப் போயிருக்கிறது. படையெடுத்து வந்த தேர்கள் ஓடுவதால் தெருவெல்லாம் ஒரே புழுதி.படையெடுத்து வந்த குதிரைகள் திரிவதால் எது வழி என்றே தெரியாத நிலை. கறை படிந்த அவர்களின் படைக்கருவிகளைக் கழுவுவதால் துறைநீரே கலங்குகிறது.அழிக்கும் மறவர் கூட்டம் ஒன்று திரள்வதால் தாங்க முடியாமல் நிலமே நெளிகிறது. இப்படி வந்திருக்கின்றனர். அவள்எல்லாரும் விரும்பும் கருமையான முகட்டுக்கண்ணுடன் நெருங்கி நிற்கும் முலை கொண்டவள். முலையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இருபுறமும் வரையப்பட்டுள்ளது. அது பூவோட்டம் [கண்ணி] காட்டும் ஓவியம். அவள் முலைக்குப் பாதுகாப்பாக வரையப்பட்ட ஓவியம். பெண்யானை பெருமூச்சு விடுவது போல வண்ணம் தெளித்து வரையப்பட்ட ஓவியம். இரும்புக் கம்பியால் வரையப்பட்ட ஓவியம். அவளும் ஆசை கொட்டும் பார்வை கொண்டவள். [மையல் நோக்கு] அவள் தையல். அழகெல்லாம் தைத்து வைக்கப்பட்ட பெண்.இரக்கம்அவளை வரும்பியவர்கள் இரக்கம் கொள்ளத்தக்கவராக ஆகிவிட்டனர். காரணம் அவளது தந்தையும், அண்ணனும்.