புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 336

பண்பில் தாயே!


பண்பில் தாயே!

பாடியவர் :

  பரணர்.

திணை :

  காஞ்சி.

துறை :

  பாற் பாற் காஞ்சி.

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே; . . . . [05]

இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே - விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் . . . . [10]

தகைவளர்த்து எடுத்த நகையொடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.

பொருளுரை:

பெண்ணைக் கேட்ட வேந்தனோ பெரும் கோவக்காரன். இவளது தந்தையும் இவளுக்குப் பருவத்தில் திருமணம் செய்து தரவேண்டிய கடமையைச் செய்யவில்லை. ஒளிரும் முகத்துத் தந்தங்களில் காப்புப்பூண் அணிந்திருக்கும் யானைகளோ கட்டுத்தறி யில் இல்லை. வேலேந்திய வீரர்களும் வாயை மடித்துச் சினம் கொண்டு திரிகின்றனர். போர்முழக்கம் செய்வோரும் செய்வதறியாமல் பல வகையான போரிசைக் கருவிகளை முழக்குகின்றனர். அந்தோ! பாதுகாப்பான இந்த ஊரே செய்வதறியாமல் திகைக்கின்றது. இவள் தாய் அறம் செய்யவில்லை. பண்பு இல்லாமல் பகையை வளர்த்துக்கொண்டிருக்கிறாள். இவளோ, வேங்கை பூத்திருக்கும் மலையில் கோங்கு பூத்திருப்பது போல வனப்பு மிக்க முலைத் தோற்றத்துடன் புன்னகையும் பூத்துக்கொண்டிருக்கிறாள். என்ன ஆகுமோ?