புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 332
வேல் பெருந்தகை உடைத்தே!
வேல் பெருந்தகை உடைத்தே!
பாடியவர் :
விரியூர் கிழார்.
திணை :
வாகை.
துறை :
மூதின் முல்லை.
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;
இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டி, . . . . [05]
இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்,
தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே . . . . [10]
பொருளுரை:
இது கூரைப் பரணில் வைக்கப்பட்டுள்ள புழங்கப்படாத பண்டங்கள் போலப் புழுதி படிந்து கூரையில் செருகப்பபட்டுக் கிடந்தாலும் கிடக்கும். அல்லாமல் விழாக்கோலத்துடன் நீராடிய பின்னர் பெரும்படையுடன் வந்த பகைவேந்தன் போர்க்களிற்றின் முகத்தில் கிடந்தாலும் கிடக்கும் நறாடிக் கிடக்கும் = புழுதி படிந்து கிடக்கும் நீராடி வரும் = மண்ணுமங்கல விழாவில் நீராடி வரும்போராடி ஏறும் = பகைவேந்தன் பட்டத்து யானை முகத்தில் ஏறும்வேல் மண்ணுமங்கலம் மங்கலமகளிர் அணிவகுத்து வந்து வேலுக்கு மாலை சூட்டுவர். அந்த அணிவகுப்புடன் நீராட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படும். இன்னிசை முழங்க எடுத்துச் செல்லப்படும். யாழிசைப் பண்ணுடன் நீராட்டப்படும். பின் தெருவெல்லாம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தைக் கண்டபோதே பகைமன்னர் மண்ணெல்லாம் அழுங்கி நடுநடுங்கும்.பின்னர் போர்களம் செல்லும். பின்னர் பகைவேந்தரின் பட்டத்து யானை முகத்தில் பாய்ந்து கிடக்கும்.