புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 328

ஈயத் தொலைந்தன!


ஈயத் தொலைந்தன!

பாடியவர் :

  பெயர் தெரியவில்லை.

திணை :

  வாகை.

துறை :

  மூதின் முல்லை.

குறிப்பு :

  இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.

.. .. டைமுதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர், நெல்விளை யாதே;
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
.. .. .. .. .. .. .. .. .. டமைந் தனனே; . . . . [05]

அன்னன் ஆயினும், பாண! நன்றும்
வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட .. .. ..
களவுப் புளியன்ன விளை .. .. .. .. .. .. ..
.. .. .. வாடூன் கொழுங்குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத், . . . . [10]

துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
உண்டு, இனி திருந்த பின் .. .. .. ..
.. .. .. .. .. .. .. .. .. தருகுவன் மாதோ
தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கும் முன்றில், . . . . [15]

சீறூர் மன்னனைப் பாடினை செலினே.

பொருளுரை:

அவன் முல்லைநிலச் சிற்றூர் மன்னன். அந்த நிலத்தில் நெல் விளையாது. விளைந்துள்ள வரகு, தினை ஆகியவற்றையெல்லாம் வந்தவர்களுக்கெல்லாம் வழங்கியை தீர்ந்துவிட்டன. அவன் அப்படி இருந்தாலும் நீ அதனைப் பற்றி எண்ணாதே. பாண! பானையில் வெள்ளம் போல ஊற்றிவைத்துள்ள பானையில் ஒரு சொட்டு உறை விட்டதும் அந்தத் திருட்டுப் புளிச்சுவை எல்லாப் பாலையும் திரித்துவிடுவது போல அவன் பிறரையெல்லாம் மாற்றிவிடுவான். பிறர் தந்த அரிசியில் நெய்யும் புலால் கறியும் கலந்து கிண்டிய களியை உண்ணத் தருவான். முஞ்ஞை தாளித் தொட்டியில் வளர்க்கப்படும். அதனை முயல் வந்து கறிக்கும் சிற்றூர் அரசன் அவன். அவனைப் பாடிக்கொண்டு சென்றால் நீ வேண்டியதைப் பெறலாம்.