புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 327
வரகின் குப்பை!
வரகின் குப்பை!
பாடியவர் :
பெயர் தெரியவில்லை.
திணை :
வாகை.
துறை :
மூதின் முல்லை.
சில்விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்,
பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலியத், தன்னூர்ச் . . . . [05]
சிறு புல்லாளர் முகத்தவை கூறி
வரகுடன் இரக்கும் நெடுந்தகை,
அரசு வரின், தாங்கும் வல்லாளன்னே.
பொருளுரை:
எருதுகளைப் பிணித்துக் கடா விடுதல் அன்றி இளையவர்கள் காலால் மிதித்து எடுத்த சிலவாக விளைந்த புல்லிய குவியலில், வளைத்துக் கொண்ட கடன்காரர்க்குக் கொடுத்தது போக மிஞ்சியதை, பசியுடன் வந்த பாணர்கள் உண்டதால், தன்னுடைய புறங்கடையில் ஒன்றும் இல்லாததால், சுற்றத்தாரின் வறுமையைக் களைய, தன்னுடைய ஊரில் வாழும் அற்பமானவர்களிடம் வரகினைக் கடனாகக் கேட்டுப் பெறும் பெருந்தலைவன் வறுமையில் இருந்தாலும், வேந்தர்கள் போரிட்டு வந்தால், அதைத் தாங்கி வெல்லும் வல்லமையுடையவன்.
குறிப்பு:
ஒற்கம் - இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை (தொல்காப்பியம், உரியியல் 64).
சொற்பொருள்:
எருது கால் உறாஅது - எருதுகளைப் பிணித்து கடா விடுதல் அன்றி (உறாஅது - அளபெடை), இளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை - இளையவர்கள் காலால் மிதித்து எடுத்த சிலவாக விளைந்த புல்லிய குவியலில், தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் - வளைத்துக் கொண்ட கடன்காரர்க்கு கொடுத்தது போக மிஞ்சியது, பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் - பசியுடன் வந்த பாணர்கள் உண்ட பின்னர் புறங்கடையில் ஒன்றும் இல்லாததால், ஒக்கல் ஒற்கம் சொலிய - சுற்றத்தாரின் வறுமையைக் களைய, தன்னூர்ச் சிறு புல்லாளர் - தன்னுடைய ஊரில் வாழும் அற்பமானவர்கள், முகத்தவை கூறி வரகுடன் இரக்கும் - வரகினைக் கடனாக கேட்டுப் பெறும், நெடுந்தகை - பெருந்தலைவன், அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே - வேந்தர்கள் போரிட்டு வந்தால் அதைத் தாங்கி வெல்லும் வல்லமையுடையவன் (வல்லாளன்னே - ஏகாரம் அசைநிலை)