புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 323
உள்ளியது சுரக்கும் ஈகை!
உள்ளியது சுரக்கும் ஈகை!
பாடியவர் :
பெயர் தெரியவில்லை.
திணை :
வாகை.
துறை :
வல்லாண் முல்லை.
குறிப்பு :
இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் . . . . [05]
கறையடி யானைக்கு அல்லது
உறைகழிப் பறியா,வேலோன் ஊரே.
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் . . . . [05]
கறையடி யானைக்கு அல்லது
உறைகழிப் பறியா,வேலோன் ஊரே.
பொருளுரை:
ஆவம் அவன் வெள்வேல் ஆவம் தாங்கிப் போருக்குச் செல்வான். அதாவது தீட்டிய வேல்களைத் தூணியில் இட்டுச் சுமந்துகொண்டு போருக்குச் செல்வான். அவன் கையில் வாள் இருக்கும். அந்த வாளைப் போர்யானைகளை மட்டுமே கால்களில் வெட்டப் பயன்படுத்துவான். ஆமான் மூதா ஆமான் என்னும் வரையாட்டுக் குட்டி ஒன்று புலிக்கடி பட்டு எப்படியோ தப்பிவிட்டது. அதற்கு அதன் தாய் பாலூட்டியது. இப்படிப்பட்ட நிலப்பகுதி ஊர் அரசன் அவன். அடி சிதைந்துபோனதால் மேலும் செய்தித் தெளிவு பெறமுடியவில்லை.