புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 321

வன்புல வைப்பினது!


வன்புல வைப்பினது!

பாடியவர் :

  உறையூர் மருத்துவன் தாமோதரனார்.

திணை :

  வாகை.

துறை :

  வல்லாண் முல்லை.

குறிப்பு :

  இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.

பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக், . . . . [05]

கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்,
வன்புல வைப்பி னதுவே - சென்று
தின்பழம் பசீஇ .. .. .. .. ன்னோ, பாண!
வாள்வடு விளங்கிய சென்னிச்
செருவெங் குருசில் ஓம்பும் ஊரே . . . . [10]

பொருளுரை:

அவன் தலையில் வெட்டுக்காயத் தழும்பு. போரின்போது வாளால் வெட்டுப் பட்டது. அவன் குருசில். செம்மையானவன். அவன் அரசன். அவன் காப்பாற்றும் ஊர் இப்படிப்பட்டது. வன்புலம் (புன்செய் நிலம்) சூழ்ந்த ஊர். கோழிச்சேவல் போரிடுவது போலக் கொடூரமாகத் தாக்கும் போர் வல்லமை உள்ள பறவை குறும்பூழ். இதனை இக்காலத்தில் காடை என்பர். மேலே உள்ள கறுப்புத் தோலை நீக்கிய பின்னர் காயவைத்திருக்கும் வெள்ளை எள்ளை இந்தப் பறவை காலம் பார்த்து ஏமாற்றி உண்ணும் ஊர். அத்துடன் இந்தப் பறவை கோங்கம்பூப் போல வளைந்த காதுகளைக் கொண்டது. மரத்தில் ஏறி இரை தேடும் எலியையும் பிடித்து ஆட்டித் தின்னும். . இப்படித் தின்றுவிட்டு வரகு வைக்கோல் சேமித்திருக்கும் போரில் ஒளிந்துகொள்ளும் இந்தப் பறவை மிகுதியாக வாழும் ஊர் அது. இந்த ஊரின் அரசன் உனக்குத் தின்னப் பழமும், வாழப் பரிசிலும் தருவான். இப்படிப் பாணன் ஒருவன் மற்றொரு பாணனுக்கு வல்லாண் - மகன் அரசன் இயல்பினை எடுத்துரைக்கிறான்.