புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 315
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
பாடியவர் :
அவ்வையார்.
பாடப்பட்டோன் :
அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை :
வாகை.
துறை :
வல்லான் முல்லை.
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் . . . . [05]
கான்றுபடு கனைஎரி போலத்,
தோன்றவும் வல்லன் - தான் தோன்றுங் காலே.
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் . . . . [05]
கான்றுபடு கனைஎரி போலத்,
தோன்றவும் வல்லன் - தான் தோன்றுங் காலே.
பொருளுரை:
அரசன் நெடுமான் அஞ்சி வீட்டுக் கூரையில் செருகி வைத்திருக்கும் தீக்கடைக்கோல் போல அடங்கிக் கிடக்கவும் தெரிந்தவன். அது தீப் பற்றிக்கொண்ட பின்னர் காட்டையே எரிக்கும் தீயாக மாறுவது போல போர்களத்தில் பகைவரை எரிக்கவும் வல்லவன். உடையன் - இருக்கும்போது நன்கு உண்பான். கடவர் - கலைக்கடமை பூண்ட வாழ்பவர் இரக்கும்போது வழங்கி மகிழ்பவன். மடவர் - மடப்பத் தன்மை பூண்ட மகளிர்க்குத் துணைவனாக வாழ்பவன். அவன் பெயர் நெடுமான் அஞ்சி.