புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 312

காளைக்குக் கடனே!


காளைக்குக் கடனே!

பாடியவர் :

  பொன்முடியார்.

திணை :

  வாகை.

துறை :

  மூதின் முல்லை.


பாடல் பின்னணி:

ஒரு நாடு சிறப்பாக விளங்க, ஒவ்வொருவரும் தமது கடமையை அறிந்து, உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதை மறக்குடியில் பெண் ஒருத்தியின் கூற்றாகப் புலவர் பொன்முடியார் அமைத்த பாடல் இது.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக் . . . . [05]

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

பொருளுரை:

மகனைப் பெற்று வளர்த்துவிடுதல் எனது முதன்மையான கடமை. அவனைக் கல்வியும், நற்பண்புகளும் நிறையப் பெற்ற சான்றோனாக ஆக்குவது அவனுடைய தந்தையின் கடமை. அவனுக்குக் கூரிய வேலை வடித்துக் கொடுப்பது கொல்லனின் கடமை. அவனுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்பிப்பது வேந்தனின் கடமை. ஒளிரும் வாள் கொண்டு வெல்வதற்கு அரிய போர் செய்து பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியோடு திரும்பி வருவது அந்த இளைஞனின் கடமை.

சொற்பொருள்:

ஈன்று புறம் தருதல் - பெற்று வளர்த்துவிடுதல், என்தலைக் கடனே - எனது முதன்மையான கடமை (கடனே - ஏகாரம் அசைநிலை), சான்றோன் - சான்றோன், நற்பண்புகள் நிறந்தவன், ஆக்குதல் - ஆக்குவது, தந்தைக்கு - தந்தையின், கடனே - கடமை (கடனே - ஏகாரம் அசைநிலை), வேல் - வேல், வடித்துக் கொடுத்தல் - செய்து கொடுதல், கொல்லற்குக் கடனே - கொல்லனின் கடமை (கடனே - ஏகாரம் அசைநிலை) , நன்னடை - நல்லொழுக்கம், நல்கல் - கற்பித்தல், வேந்தற்குக் கடனே - வேந்தனின் கடமை (கடனே - ஏகாரம் அசைநிலை), ஒளிறு வாள் - ஒளிரும் வாள், அரும் - அரிய, சமம் - போர், முருக்கி - செய்து, களிறு - யானை, எறிந்து - கொன்று, பெயர்தல் - வெற்றியோடு மீளுதல், காளைக்குக் கடனே - இளங் காளையான ஆண்மகனின் கடமை (கடனே - ஏகாரம் அசைநிலை)