புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 311
சால்பு உடையோனே!
சால்பு உடையோனே!
பாடியவர் :
அவ்வையார்.
திணை :
தும்பை.
துறை :
பாண் பாட்டு.
களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை;
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து,
பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்துச்; . . . . [05]
சிறப்புடைச் செங்கண் புகைய, வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை;
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து,
பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்துச்; . . . . [05]
சிறப்புடைச் செங்கண் புகைய, வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.
பொருளுரை:
போர்க்களத்தில் சிறப்புற்றுச் சிவந்து பாயும் இவன் கண்ணை ஒரு கேடயத்தால் மறைப்பதற்கு யாருமே இல்லையா? எல்லாரையும் கொன்று குவிக்கிறானே! யார் இவன்? களர் நிலத்தில் கூவல் - மண்ணைத் தோண்டி எடுத்துத் துணியில் கலந்து நீரில் வெளுத்துத் தருபவள் புலைத்தி (வண்ணாத்தி). அவள் துவைத்துத் தந்த தூய வெண்ணிற ஆடையை இவன் உடுத்திக்கொண்டான். அந்த ஆடை அழுக்காகும்படி மரத்தழைகள் எருவாகிக் கிடக்கும் மறுகில் (தெருவில்) வந்து அமர்ந்துகொண்டான். பலரது குறைகளையும் கேட்டுத் தீர்த்துவைத்தான். அவன் மலர்மாலை அணிந்த மார்பினன். அந்த இவனது கண்ணைத்தான் யாராவது மறைக்க வேண்டும். போரை விரும்பாத புலவர் ஔவையார் இவ்வாறு கூறுகிறார். தொண்டைமானிடம் தூது சென்றதை இங்கு எண்ணிப்பார்த்தல் நன்று.