புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 310
உரவோர் மகனே!
உரவோர் மகனே!
பாடியவர் :
பொன்முடியார்.
திணை :
தும்பை.
துறை :
நூழிலாட்டு.
பாடல் பின்னணி:
போர்க்களத்தில் தன் மகனின் வீரச்செயலைக் கண்ட மறத்தாய் ஒருத்தியின் வியப்பைப் பதிவு செய்யும் வகையில் புலவர் பொன்முடியார் இயற்றிய அழகிய பாடல் இது.
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே! இனியே
புகர் நிறங் கொண்ட களிறு அட்டு ஆனான்
முன் நாள் வீழ்ந்த உரவோர் மகனே, . . . . [05]
உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே.
பொருளுரை:
பிள்ளைப் பருவத்தில் பாலை ஊட்டினால் குடிக்க மாட்டான். சினம் கொள்ளாது பொய்ச் சினம் காட்டிச் சிறிய கோலை நான் ஓங்கிய போது அச்சம் கொண்ட மகனை எண்ணிக் கவலை கொண்டு வருந்தும் மனமே! இப்பொழுது நெற்றியில் புள்ளிகள் கொண்ட யானைகளைக் கொன்றும் அமையாதவனான இவன், முந்தைய நாளில் போரிட்டு வீழ்ந்த வீரனின் மகன். மார்பில் புண்ணோடு தைத்து நிற்கும் அம்பை அறியேன் என்றவன், உறுதியுடன் போரிட்டு, குதிரையின் பிடரி மயிர் போன்ற குடுமியுடனும், சிறிய தாடியோடும் கேடயத்தின் மேல் வீழ்ந்து கிடக்கிறான்.
சொற்பொருள்:
பால்கொண்டு - பாலைக் கையில் கொண்டு, மடுப்பவும் - ஊட்டவும், உண்ணான் - குடிக்க மாட்டான், ஆகலின் - ஆதலால், செறாஅது - சினம் கொள்ளாது (அளபெடை, செறுதல் - சினத்தல்), ஓச்சிய - ஓங்கிய, சிறுகோல் - சிறிய கோல், அஞ்சியொடு - அச்சம் கொண்டு, உயவொடு - கவலையோடு, வருந்தும் - வருந்தும், மனனே - மனமே (மனன் - மனம் என்பதன் போலி), இனியே - இப்பொழுது, புகர் - புள்ளி, நிறம் - தன்மை, கொண்ட - கொண்ட, களிறு - களிற்று யானை ஆண் யானை, அட்டு ஆனான் - கொன்றும் அமையாதவன், முன் நாள் - முன்னாள், வீழ்ந்த - போரிட்டு வீழ்ந்த, இறந்த, உரவோர் மகனே - வீரனின் மகனே, உன்னிலன் - அறியேன், என்னும் - என்னும், புண் ஒன்று அம்பு - புண்ணோடு ஒன்றி தைத்து நிற்கும் அம்பு, மான் உளை - குதிரையின் பிடரிமயிர் (மான் - குதிரை), அன்ன - போல, குடுமி - தலைக் குடுமி, தோல் மிசைக் - கேடயத்தின் மேல் (தோல் - கேடயம், மிசை - மேல்), கிடந்த - வீழ்ந்து கிடந்த, புல் அணலோனே - சிறிய தாடியை உடையோன் (அணலோனே - ஏகாரம் அசைநிலை)