புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 308
நாணின மடப்பிடி!
நாணின மடப்பிடி!
பாடியவர் :
கோவூர் கிழார்.
திணை :
வாகை.
துறை :
மூதின் முல்லை.
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,
மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே; . . . . [05]
வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை
சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக், . . . . [10]
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.
மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே; . . . . [05]
வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை
சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக், . . . . [10]
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.
பொருளுரை:
சீரியாழின் நலமும், நயமும் அறிந்த பாணன் அவன். அந்த யாழில் நயமாக வரும் பண் மிஞிறு என்னும் வண்டின் இசை போல் இருக்கும். பச்சை என்பது யாழின் போர்வை. அது மின்னல் போல் இருக்கும். அதன் நரம்பு பொன் - கம்பி போல் இருக்கும். நிகழ்வு சீறூர் மன்னன் சிறிய இலைப்பகுதியை உடைய தன் எஃகம் என்னும் வேலை வீசினான். அது வேந்தன் ஊர்ந்துவந்த யானையின் முகத்தில் பாய்ந்தது. சினம் கொண்ட வேந்தன் தன் வேலை வீசினான். அது என் தலைவனாகிய சீறூர் மன்னன் மார்பில் பாய்ந்தது. நம்முடைய பெருவிறல் (பெரும் - வெற்றியாளன்) தன் நெஞ்சில் பாய்ந்த வேலைப் பிடுங்கி வீசினான். அப்போது அங்கிருந்த யானைகள் எல்லாமே தம் பெண்யானைகள் கண்டு நாணும்பட்டித் திரும்பி ஓடின.