புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 305
சொல்லோ சிலவே!
சொல்லோ சிலவே!
பாடியவர் :
மதுரை வேளாசான்.
திணை :
வாகை.
துறை :
பார்ப்பன வாகை.
வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,
உயவல் ஊர்திப், பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி, . . . . [05]
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.
உயவல் ஊர்திப், பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி, . . . . [05]
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.
பொருளுரை:
அந்தப் பார்ப்பான் பசலைக்கொடி போல் வாடிய இடுப்பினை உடையவன். மென்மையாக ஊர்ந்து நடப்பவன். பச்சை மனம் கொண்டவன் அவன் இரவு வேளையில் வந்தான். அரண்மனை வாயிலில் யாராலும் தடுத்து நிறுத்தப்படாமல் உள்ளே சென்றான். ஏதோ சில சொல் சொன்னான் (தூது). அதனைக் கேட்டதும் முற்றுகை இட்டவர் மதிலில் ஏறச் சாத்திய ஏணியை எடுத்துவிட்டனர் (முற்றுகையை விட்டுவிட்டனர்). அடைக்கப்பட்டிருந்த கோட்டைக் கதவின் சீப்பு (கீழ்த்தாழ்ப்பாள்) களையப்பட்டது. (கோட்டைக்கதவு திறந்து விடப்பட்டது) போர் நின்றது.