புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 304
எம்முன் தப்பியோன்!
எம்முன் தப்பியோன்!
பாடியவர் :
அரிசில்கிழார்.
திணை :
தும்பை.
துறை :
குதிரை மறம்.
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே; நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு . . . . [05]
நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்,
புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று; . . . . [10]
இரண்டா காது அவன் கூறியது எனவே.
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே; நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு . . . . [05]
நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்,
புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று; . . . . [10]
இரண்டா காது அவன் கூறியது எனவே.
பொருளுரை:
பெண்ணுக்கு மாலை சூட்டுவது போல நீ உன் குதிரைக்கு மாலை சூட்டுகிறாய். நடுங்கவைக்கும் பனிக்குளிரைப் போக்குவதற்காக நார் விலக்கி விளைந்த அரி என்னும் போதைநீரை உட்கொள்கிறாய். காற்றின் வேகத்தைப் பின்னுக்குத் தள்ளிப் பாயும் குதிரையை அணியமாக்குகிறாய். ஒன்று நினைவில் கொள்வாயாக. நேற்று என் முன்னோனை (அண்ணனை, அரசனை)க் கொன்றவன் தன் தம்பியையும் ஒன்றுசேர்த்துக்கொண்டு “நாளை போர் செய்வேன்” என்று கூறினானாம். இன்று பசிப்புண்ணால் வலிக்கும் தன் வயிற்றுக்கு உணவுகூடத் தராமல் தன் குதிரைமேல் வருகிறானாம். அதனைக் கேள்வியுற்றதும் வெற்றிமுரசு கொட்டி வெற்றிப்போர்களைக் கண்ட வேந்தன் பாசறைநில் உள்ளோர் நடுந்துகிறது. அவன் சொன்ன சொல் இரண்டாக ஆகப்போவது இல்லை. ஒரே சொல்லாகும்படி செய்து முடிப்பான் (ஆகவே கவனமாகப் போரிடு).