புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 302

வேலின் அட்ட களிறு?


வேலின் அட்ட களிறு?

பாடியவர் :

  வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்).

திணை :

  தும்பை.

துறை :

  குதிரை மறம்.

வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் . . . . [05]

கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
விண்ணிவர் விசும்பின் மீனும், . . . . [10]

தண்பெயல் உறையும், உறையாற் றாவே.

பொருளுரை:

காளையின் குதிரை மூங்கில் வெடிப்பது போல ‘டப், டப்’ என்று தாவித் துள்ளிப் பாய்ந்தது. (வளைத்து விட்ட மூங்கில் விசிவது போலத் தாவிப் பாய்ந்தது எனக் காட்டுகிறது, பழைய உரை) காளையின் ஊர் கரம்பு நிலம் என்றாலும் வறுமை (நிரப்பு - நிரம்பு) இல்லாத ஊர் பாணர் வாழும் ஊர். நரந்தம் பூப் பூத்திருக்கும் கொடியை யாழின் வளைவுக் கோட்டில் சுற்றிக்கொண்டு இசை கூட்டும் பாணர் வாழும் ஊர். விருதாகப் பெற்ற பொற்றாமரைப் பூவைக் கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் பாணர் - மகளிர் வாழும் ஊர்.