புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 300

எல்லை எறிந்தோன் தம்பி!


எல்லை எறிந்தோன் தம்பி!

பாடியவர் :

  அரிசில் கிழார்.

திணை :

  தும்பை.

துறை :

  தானைமறம்.

தோல்தா; தோல்தா என்றி; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி,
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
பேரூர் அட்ட கள்ளிற்கு . . . . [05]

ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.

பொருளுரை :

நேற்று நீ ஒரு வீரனை வீழ்த்தினாயே அவன் தம்பி உன்னைக் கொல்வதற்குத் தேடிக்கொண்டிருக்கிறான். தீ கக்கும் எரிமலை போலத் தன் கண்ணைச் சுழற்றிக்கொண்டு தேடிக்கொண்டிருக்கிறான். அவனது பேரூர் அவனுக்குக் கள் வார்த்திருக்கிறது. அதற்குக் கைம்மாறாக ஓர் இல்லம் கொண்ட கோயிலை (அரசனின் அரண்மனையையே) வீழ்த்தத் தேடிக்கொண்டிருக்கிறான். (நீ ஒளிந்திருப்பதால் பயன் ஒன்றும் இல்லை. அந்த மறவன் உன்னைக் கொல்லாமல் விடமாட்டான்).