புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு : 299
கலம் தொடா மகளிர்!
கலம் தொடா மகளிர்!
பாடியவர் :
பொன் முடியார்.
திணை :
நொச்சி.
துறை :
குதிரை மறம்.
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,
கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, . . . . [05]
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,
கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, . . . . [05]
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.
பொருளுரை :
இரண்டு சிற்றூர் மன்னர்களுக்கு இடையே போர். இருவரும் குதிரைமீது வந்து போரிட்டனர். ஒருவன் பருத்திச்செடி வேலியாக விளங்கும் சீறூர் மன்னன். அவன் குதிரை உழுந்துச் சக்கையை உண்டு வளர்ந்தது. மற்றொருவன் தண்ணடை (நன்செய்நிலம்) அரசன். இவன் குதிரை நெய் ஊற்றி மிதித்த சோற்றினைத் தின்று வளர்ந்தது. பிடரி மயிர் கத்திரிக்கப்பட்டு அழகிய தோற்றம் கொண்டது. மாலையிட்டு அழகு செய்யப்பட்டது. உழுந்து - அதர் தின்ற குதிரை போரிடுவோரை விலக்கிக்கொண்டு பாய்ந்தது. நெய்ச்சோறு தின்ற குதிரை அதனைத் தொடக்கூடச் செய்யாமல் ஒதுங்கி நின்றது. குதிரைமீது வந்த மன்னர்கள் இவ்வாறு போரிட்டனர். எப்படி ஒதுங்கி நின்றது? மாதவிடாய்க் காலத்தில் சமையல் செய்யாமல் ஓய்ந்திருக்கும் மகளிர் முருகன் கோயிலுக்குள் நுழையாமல் அதன் வெளிப்புறம் நின்று வழிபடுவது போல நெய்ச்சோறு தின்ற குதிரை ஒதுங்கி நின்றது.