புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 298

கலங்கல் தருமே!


கலங்கல் தருமே!

பாடியவர் :

  தெரியவில்லை.

பாடப்பட்டோன் :

  தெரியவில்லை.

திணை :

  தெரியவில்லை.

துறை :

  தெரியவில்லை.

'எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும் மன்னே; நன்றும்
இன்னான் மன்ற வேந்தே; இனியே
நேரார் ஆரெயில் முற்றி,
வாய் மடித்து உரறி, நீ முந்து? என் னானே . . . . [05]

பொருளுரை :

தேறல் கள்ளை அரசன் மட்டும் உண்கிறான். பகைவர் கோட்டையை முற்றுகை இட்டுக்கொண்டிருக்கையில் தன் வாயை மடித்து உருமுகிறான். மறக்குடி மகன் ஒருவனை “நீ முந்திச் செல்” என உருமுகிறான். இந்த அரசன் கொடியவன். கோட்டை முற்றுகையைக் கூறும் இந்தப் பாடலை - கரந்தை நெடுமொழி எனத் - திணை - துறை பகுத்தவர் குறிப்பிடுவது எதனால் என விளங்கவில்லை.