புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 297

தண்ணடை பெறுதல்!


தண்ணடை பெறுதல்!

பாடியவர் :

  தெரியவில்லை.

பாடப்பட்டோன் :

  தெரியவில்லை.

திணை :

  வெட்சி.

துறை :

  இண்டாட்டு.

பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்,
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி . . . . [05]

நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்,
துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே, வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்,
மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே . . . . [10]

பொருளுரை :

சீறூர் - சிற்றூர் - பெருகிக் கிடக்கும் தண்ணீரை எருமை விரும்பும். இலை - அடை மண்டிக் கிடக்கும் தண்ணடை நிலம் அது. கன்றுகளுடன் மரையா துஞ்சும் சீறூர் அது. அங்கே பயிற்றம்பயறு அடித்த கோது கொட்டிக்கிடக்கும் மெத்தையில் அந்த மரையா உறங்கும். அத்தகைய சீறூரை இங்கே பெற்றுக்கொள்ள மாட்டேன் என்றான் அவன். போருக்குப் புறப்படும்போது இவ்வாறு சொன்னான். இப்போது போர்க்களத்தில் நிற்கிறான். கருக்குமட்டையுடன் நிற்கும் பனைமரம் போல நிற்கிறான். தன் உடலில் வேல்நுனிகள் பல பாய்ந்திருக்கும் கோலத்துடன் நிற்கிறான். இவனுக்கு இப்போது தண்ணடை நன்செய்நிலம் புரவு நிலமாக வழங்குதல் தகும். நீர்நிலைகளில் வாழும் கம்புள் கோழி முட்டையிட்டு வாழும் தண்ணடை நிலம் பெற்றுக்கொள்ளும் உரிமை இப்போது இவனுக்கு உண்டு