புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 296

நெடிது வந்தன்றால்!


நெடிது வந்தன்றால்!

பாடியவர் :

  வெள்ளை மாளர்.

திணை :

  வாகை.

துறை :

  எறான் முல்லை.

வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே? . . . . [05]

பொருளுரை :

காஞ்சிப்பண் இசைக்கின்றனர். (புண் வலி தெரியாமல் இருக்க) வெண்சிறு கடுகு எண்ணெய் பூசுகின்றர். வெண்சிறு கடுகைப் புகைக்கின்றனர். எல்லா வீடுகளிலும் ‘கல்’ என்ற கமுக்கமான ஒலி. ஒருவன் தேர் மட்டும் மெதுவாகக் காலம் தாழ்ந்து வந்துகொண்டிருக்கிறது. அவன் தன் விழுப்புண் பற்றிக் கவலை கொள்ளவில்லை. இவன்மீது வேந்தன் சினம் கொள்வானோ? (உடனே வந்து புண்ணை ஆற்றிக்கொள்ளாமைக்காக) பண்டைக்காலப் போர்முறை - காலையில் குறிப்பிட்ட காலத்தில் போர்த்தொடக்கப்பறை இரண்டு பக்கங்களிலும் முழங்கப்பட்ட பின்னர் போர் நிகழும். மாலையில் குறிப்பிட்ட காலத்தில் போர்நிறுத்தப் பறை ஒருபக்கத்தில் முழங்கியதும் நிறுத்தப்படும். மறுநாள் தொடரும். பாடலில் கூறப்பட் மறவன் போர் நின்றதும் திரும்பாமல் பூண்ணைப் பற்றிக் கவலைப்படாமல் காலம் கடந்து திரும்புகிறான். அதனால் அரசன் சினம் கொள்வானோ எனப் பாடல் குறிப்பிடுகிறது.