புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு : 293
பூவிலைப் பெண்டு!
பூவிலைப் பெண்டு!
பாடியவர் :
நொச்சி நியமங்கிழார்.
திணை :
காஞ்சி.
துறை :
பூக்கோட் காஞ்சி.
நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ? . . . . [05]
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ? . . . . [05]
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!
பொருளுரை :
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் = நெஞ்சை நிமிர்த்திப் போரிடுவோருக்குத் தளராது யானைமேலிருந்து தாக்கும் வேந்தன், குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை - குறுநில மன்னன் பணிந்து பெண்ணைத் தந்துவிட வேண்டும் என்று முழக்கும் தண்ணுமையானது, நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் = எதிர்த்துத் தாக்காமல் நாணம் கொண்டு அமைவோர்க்கு ஒலிக்குமாயின், எம்மினும் பேர் எழில் இழந்து = புலவர் கூறுகிறார், தன்னைக்காட்டிலும் அழகிழந்து, வினை என = தலைவிதியே என்று, பிறர்மனைப் புகுவள் கொல்லோ = மறக்குடி மகன் அல்லாத வேந்தனாகிய பிறர் மனை புகுவாளோ, பூவிலைப் பெண்டு = வேந்தன் தரும் பூவிலையைப் பெற்றுக்கொண்டு எனப் பாடலில் உள்ளவாறு பொருளமைதி கண்டுகொள்ளலாம்.