புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 291

மாலை மலைந்தனனே!


மாலை மலைந்தனனே!

பாடியவர் :

  நெடுங்கழுத்துப் பரணர்.

திணை :

  கரந்தை.

துறை :

  வேத்தியல்.

சிறாஅஅர்! துடியர்! பாடுவல் மகாஅஅர்;
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்,
விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்;
என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே . . . . [05]

கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை!
மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!

பொருளுரை :

மாயோன் (கருநிறக் காளை) மாண்டான். அவன் உடலைப் பாதுகாக்க வேண்டும். சிறுவர்களே! துடிப்பறை முழக்குபவர்களே! பாடும் பாணர் மக்களே! நீங்கள் இவன் பக்கத்தில் இருங்கள். தூய வெண்ணிற ஆடையைப் போர்த்துங்கள். இவனைத் தின்ன வரும் பறவைகளை ஓட்டுங்கள். நான் விளரிப்பண் (இரங்கல் - பண்) பாடி நரியை ஓட்டுகிறேன். என்னைப் போல் எல்லாரும் துடிப்போடு செயல்படுங்கள். வேந்தனும் விரைந்து செயல்படட்டும். மாண்ட மாயோன் பயன்படாவிட்டாலும் போரில் சாதலை விரும்புபவன். விரும்பியபடி போரில் மாண்டிருக்கிறான். வேந்தன் தன் தலைமாலையை இவன் தலையில் சூட்டுவானாக. அத்துடன் இவன் கழுத்தில் ஒரு வயிர - மாலை சூட்டுவானாக.