புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு : 290
மறப்புகழ் நிறைந்தோன்!
மறப்புகழ் நிறைந்தோன்!
பாடியவர் :
அவ்வையார்.
திணை :
கரந்தை.
துறை :
குடிநிலையுரைத்தல்.
இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை - இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே . . . . [05]
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் - பெரும! நிற் குறித்துவரு வேலே.
இனக்களிற்று யானை - இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே . . . . [05]
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் - பெரும! நிற் குறித்துவரு வேலே.
பொருளுரை :
அரசே! கள்ளை இவனுக்குக் கொடுத்துவிட்டுப் பின்னர் நீ உண்க. உன்னுடைய பாட்டனுக்கு இவனுடைய தந்தை உதவினான். பகைவர் வேலை எடுத்து எறியும் போரில் கண் இமைக்காது முன்னே நின்று தடுத்து உதவினான். தச்சன் செய்த வண்டிச் சக்கரத்தில் ஆரைக்கால்கள் பாய்ந்து நிற்கும் குடம் போல வேல்கள் உடம்பில் பாய்ந்து நிற்க மாண்டான். இவனும் வீரத்தில் புகழ் நிறைந்து வலிமை மிக்கவன். மழை மொழியும்போது தாழங்குடை மழையைத் தடுப்பது போல உன்மீது பாயும் வேலை இவன் தடுத்து நிற்பான்.