புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 289

ஆயும் உழவன்!


ஆயும் உழவன்!

பாடியவர் :

  கழாத்தலையார்.

திணை :

  தெரியவில்லை.

துறை :

  தெரியவில்லை.

ஈரச் செவ்வி உதவின ஆயினும்,
பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி,
வீறுவீறு ஆயும் உழவன் போலப்,
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
மூதி லாளர் உள்ளும், காதலின் . . . . [05]

தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை,
இவற்கு ஈக! என்னும்; அதுவும்அன் றிசினே;
கேட்டியோ வாழி - பாண! பாசறைப்,
பூக்கோள் இன்று என்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? . . . . [10]

பொருளுரை :

பாசறையில் இன்று பூக்கோள் (பூமி விரிவாக்கும் நாள்) - என்றான். (பூ = பூத்திருக்கும் நிலம் - ஒப்புநோக்குக - பூமாதேவி) பூக்கோள் நாள் என்பது செல்லும் போர்த்தன்மைக்கு ஏற்ற அடையாளப் பூவைச் சூடும் விழாநாள் என்று பூறநானூற்றுப் பழைய உரைக்குறிப்பு கூறுகிறது. அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என்பன. ஈரநிலத்தை உழுவதற்குப் பயன்பட்ட பல எருதுகளுக்குள்ளே நல்ல எருதினைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து நல்லேர் விழாக் கொண்டாட்டத்தில் ஏரில் பூட்டும் உழவனைப் போல முதுகுடியில் பிறந்த பலருள்ளும் சிறந்த வீரனைத் தெரிவுசெய்து “எனக்குப் பொன்னிற அகல்மண்டையில் முகந்தெடுத்த கள்ளையும் கறியையும் இவனுக்கே கொடுங்கள்” என்று ஒருவன் இவன்மீதுள்ள காதலால் சொல்வதையும் கேட்டாயா? அத்துடன் “ஆங்கே இருப்பதையும் இவனுக்கே கொடுங்கள்” என்கிறானே!