புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 288

மொய்த்தன பருந்தே!


மொய்த்தன பருந்தே!

பாடியவர் :

  கழாத்தலையார்.

திணை :

  தும்பை.

துறை :

  மூதின் முல்லை.

குறிப்பு :

  இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,
ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, . . . . [05]

நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை .. .. .. .. .. .. .. .. .. .. .. மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.

பொருளுரை :

அவள் முலை பருத்தன. அவனைத் தழுவ விரும்பிய விம்மிதத்தில் பருத்தன. அவளை மொய்த்துக்கொண்டு (நச்சரித்திக்கொண்டு) பருத்தன. பெரியதோர் போரில் வேல் பாய்ந்து அவன் மார்பில் குருதி ஒழுகிக்கொண்டிருந்தது. அவனை அவள் முயங்கித் தழுவவில்லை. காரணம் அவள் நாணம். அவன் மார்பில் ஒழுகிக்கொண்டிருக்கும் குருதி அன்று. அன்று போர். முரசு முழக்கத்துடன் போர். முரசு மயிர் சீவாத பச்சையான தோல் போர்த்திய முரசு. தன் கூர்மையான கொம்புகளால் மண்ணைக் குத்தித் தன் திறமையைக் காதலிப் பசுவுக்குக் காட்டிய இரண்டு காளைகளில் வென்ற காளையின் தோலை உரித்துப் போர்த்தப்பட்ட முரசம் அது. அந்த முரசு முழங்கிய போர் அது.