புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 286

பலர்மீது நீட்டிய மண்டை!


பலர்மீது நீட்டிய மண்டை!

பாடியவர் :

  அவ்வையார்.

திணை :

  கரந்தை.

துறை :

  வேத்தியல்.

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்,
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்வழி கட்டிலிற் கிடப்பித்,
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே! . . . . [05]

பொருளுரை :

வெண்ணிற வெள்ளாட்டுத் தலை போன்ற தோற்றத்துடன் என் மகனது தோழர்களாகிய இளையர் (வீரர்) பலர் இருக்கும்போது என் சிறுவன் மட்டும் இல்லை. அவன் ஆனிரை மீட்கும் கரந்தைப் போரில் ஈடுபட்டிருக்கும்போது பலரது மண்டைகளை உருட்டினான். அப்போது இவன் மண்டையும் உருண்டுவிட்டது. அதனால், இறந்தவர்களைக் கால் இல்லாத பாடைக் கட்டிலில் கிடத்தி வெள்ளைத்துணி போர்த்திச் சடங்கு செய்து எரிப்பார்களே அது போன்ற சடங்கைக் கூட என்னால் செய்ய முடியவில்லையே - என்கிறாள் தாய் ஒருத்தி.