புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 285

தலைபணிந்து இறைஞ்சியோன்!


தலைபணிந்து இறைஞ்சியோன்!

பாடியவர் :

  அரிசில் கிழார்.

திணை :

  வாகை.

துறை :

  சால்பு முல்லை.

குறிப்பு :

  இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.

பாசறை யீரே! பாசறை யீரே!
துடியன் கையது வேலே; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே; காண்வரக்
கடுந்தெற்று மூடையின்.................... . . . . [05]

வாடிய மாலை மலைந்த சென்னியன்;
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென, விடுகணை மொசித்த
மூரி வேண்டோள் .........................
சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ! . . . . [10]

மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக;
நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ;
அதுகண்டு, பரந்தோர் எல்லாம் - புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே, குருசில்! - பிணங்குகதிர்
அலமரும் கழனித் தண்ணடை ஒழிய; . . . . [15]

இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.

பொருளுரை :

போர்ப்பாசறையில் இருப்பவர்களே! போர்ப்பாசறையில் இருப்பவர்களே! கேளுங்கள். குருதி கொட்டக் கொட்ட வெற்றிவீரன் வந்தான். துடிப்றை முழக்கும் கலைஞன் அவனது வேலைச் சுமந்துகொண்டு வந்தான். யாழ் மீட்டும் பாணன் அவனது தோலை (கேடயத்தை) எடுத்துக்கொண்டு வந்தான். வீரனின் தலைமாலை வாடிக் கிடந்தது. வேந்தனின் ஆணையை நிறைவேற்றும் ஆட்சிச் சுற்றம் அவனைச் சூழ்ந்து வந்தது. வலிமை மிக்க அந்தச் செம்மலின் தோல் - கேடையம் கிழிந்துபோய்(மூரி) குருதிச் சேற்றோடு காணப்பட்டது. ஓஓ! மாற்றான் வேல் அவன் மார்பின் உள்ளே பாய்ந்தது. அதனை அவன் பிடுங்கிப் போட்டான். அப்போது அவன் காலில் அணிந்திருந்த வீரக்கழலில் அவனது தசைப்பிண்டம்(நிணம்) ஒட்டிக்கொண்டது. இவற்றோடு அவன் நிலத்திலே சாய்ந்தான். அது கண்டு அங்குப் பரவிநின்றோர் அனைவரும் அவனைப் புகழ்ந்தனர். அதனைக் கேட்ட அந்தக் குரிசில் (செம்மல்) [குரு = சிவப்பு, குரு = செம்மையான நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்துகாட்டுபவர்] புகழ்ந்தவருக்குத் தலைவணங்கினான். புகழுக்கு நாணினான். அத்துடன் அரசனாகிய குருசிலும் அவனுக்கு ஓர் ஊரையே நிலக்கொடையாக வழங்கினான். அது நெருக்கமாக நெற்கதிர் வாங்கி விளையும் நன்செய் வயல் (கழனி) சூழ்ந்த ஊர். அவன் வறண்ட நிலம் கொண்ட (கரம்பை) சிற்றூரில் வாழ்ந்தவன். வறுமையில் வாடிய சுற்றத்தாரின் தலைவன்.