புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 284

பெயர்புற நகுமே!


பெயர்புற நகுமே!

பாடியவர் :

  ஓரம் போகியார்.

திணை :

  தும்பை.

துறை :

  பண்பாட்டு.

வருகதில் வல்லே; வருகதில் வல் என
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடிக், காலின்,
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த . . . . [05]

ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்,
தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே.

பொருளுரை :

‘தில்’ உடையோர் உடனே வருக. ‘தில்’ உடையோர் உடனே வருக. இது வேந்தன் விடுத்த தூதுச் செய்தி. இந்தச் செய்தி முழக்கத்தை ஆங்காங்கே முழங்கி நின்று அந்தப் பாணன் சொன்னான். அதனைக் கேட்டதும் முதுகுடி மறவன் ஒருவன் தன்னந்தனியே ஓடிவந்தான். காற்றைப் போல் கால் தெறிக்க ஓடிவந்தான். கழுத்தில் அறுந்த நூலால் கட்டிய மாலை அணிந்திருந்தான். போர்முகத்தில் எதிரிகள் முன்னேறாவண்ணம் தடுத்துக்கொண்டு நின்றான். எதிராளி யானையின் ஒற்றைக் கையை வெட்டி வீழ்த்தினான். அப்போது மிறை (கறை) படிந்த தன் வாளை யானையின் எயிறு(பல்) போல் விளங்கும் அதன் தந்தத்தில் தீட்டிக்கொண்டான்.