புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 282

புலவர் வாயுளானே!


புலவர் வாயுளானே!

பாடியவர் :

  பாலை பாடிய பெருங்கடுங்கோ.

திணை :

  தெரியவில்லை.

துறை :

  தெரியவில்லை.

குறிப்பு :

  இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.

எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை,
யாண்டுளனோ? வென, வினவுதி ஆயின்,
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம் . . . . [05]

அருங்கடன் இறுமார் வயவர் எறிய,
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே,
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய . . . . [10]

பலகை அல்லது, களத்துஒழி யதே;
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ,
நாநவில் புலவர் வாய் உளானே.

பொருளுரை :

வேல் அவன் மார்பில் பாய்ந்தது. உலகுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தவன் அவன். அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்று வினவுவாயானால், தன் கடமையை நிறைவேற்ற எதிர்த்து வந்த வீரர்களை எல்லாம் அவன் தன் நெஞ்சை நிமிர்த்தித் தாங்கினான். அவன் உடம்பும் இப்போது தெரியவில்லை. உயிர் கெட்டுப்போய்விட்டது. எனினும் ஒன்று தெரிகிறது. அவனைத் தாக்கியவர்கள் எல்லாரும் திரும்பிப் போய்க் கொண்டிருக்கின்றனர். இப்போது போர்க்களத்தில் அவனது பலகை (கேடயம்) மட்டும் கிடக்கிறது. அவனது உடம்பை அலகைகள் தின்றுத் தீர்த்துவிட்டன. இப்போது அவன் தொலை தூரங்களிலும் தன் புகழை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறான்.