புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு : 281
நெடுந்தகை புண்ணே!
நெடுந்தகை புண்ணே!
பாடியவர் :
அரிசில் கிழார்.
திணை :
காஞ்சி.
துறை :
பேய்க் காஞ்சி.
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ,
வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்,
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி;
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, . . . . [05]
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,
காக்கம் வம்மோ - காதலந் தோழீ!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!
வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்,
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி;
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, . . . . [05]
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,
காக்கம் வம்மோ - காதலந் தோழீ!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!
பொருளுரை :
இனிய பழம் தரும் இரவம் தழையையும் (மாந்தழை போலும்), வேப்பந்தழையும் வீட்டு மனையில் செருகுவோம். வளைந்த கொம்புப்பகுதி யாழிசையோடு பல்வகை இசைக்கருவிகளையும் முழக்குவோம். கையால் பையப் பையத் தடவிக்கொடுப்போம். மருந்து - மை இழுது (பசை) தடவிக் கட்டுவோம். ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய் புண்ணில் தூவுவோம். ஆம்பலங்குழல் ஊதுவோம். (புண் வலி தெரியாமல் இருக்க) மணி அடித்துக்கொண்டு காஞ்சிப்பண் (தூங்கவைக்கும் இசை) பாடுவோம். வீடு முழுவதும் மணம் கமழும்படி புகை மூட்டுவோம். இப்படி அவனைக் காப்பாற்றுவோம்.