புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 279

செல்கென விடுமே!


செல்கென விடுமே!

பாடியவர் :

  ஒக்கூர் மாசாத்தியார்.

திணை :

  வாகை.

துறை :

  மூதின் முல்லை.


பாடல் பின்னணி :

முதிய மறக்குடியில் பிறந்த ஒரு பெண் தன் தந்தையையும் கணவனையும் போரில் இழந்தாள். எனினும், போர்ப் பறையின் ஒலி கேட்டவுடன் தன் இளம் மகனைப் போருக்கு அனுப்புகின்றாள். ஒக்கூர் மாசாத்தியார் அதை வியந்து பாடுகின்றார்.

கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே,
மூதின் மகளிர் ஆதல் தகுமே,
மேல் நாள் உற்ற செருவிற்கு, இவள் தன் ஐ
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே,
நெருநல் உற்ற செருவிற்கு, இவள் கொழுநன் . . . . [05]

பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே,
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று, மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள் . . . . [10]

செருமுக நோக்கிச் செல்க, என விடுமே.

பொருளுரை :

கெடுக இவளது சிந்தை. கடுமையானது இவளது துணிவு. இவள் முதிய மறக்குடியின் பெண்ணாக இருப்பதற்கு தகுந்தவள் தான். முந்தா நாள் நிகழ்ந்த போரில் இவள் தந்தை யானையைக் கொன்று களத்தில் உயிர் நீத்தான். நேற்று நிகழ்ந்த போரில் இவளது கணவன் பகைவரின் பெரும் பசுக் கூட்டத்தைக் கவரும் முயற்சியைத் தடுத்துக் களத்தில் உயிர் துறந்தான். இன்று தெருவில் பறையின் ஒலியைக் கேட்டதும், விருப்பத்தால் மயங்கி, தன் ஒரே மகனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய உலர்ந்த குடுமியில் எண்ணையைத் தடவிச் சீவி முடித்து, அவன் கையில் வேலைக் கொடுத்துப் ‘போர்க் களத்தை நோக்கி செல்க’ என்று அனுப்பினாள்.

குறிப்பு :

ஒளவை துரைசாமி உரை - ‘கெடுக சிந்தை’ ‘கடிது இவள் துணிவே’ என்றும் கூறியது இகழ்வு போலப் புகழ்ந்தவாறு.

சொற்பொருள் :

கெடுக - கெட்டு விடுக (கெடுக - வியங்கோள் வினைமுற்று), சிந்தை - மனம், கடிது - கடுமையானது, இவள் துணிவே - இவளது துணிவு (துணிவே - ஏகாரம் அசைநிலை), மூதின் - முதிய மறக்குடியின், மகளிர் ஆதல் - பெண்ணாக இருத்தல் தகுமே - தகுந்ததே (தகுமே - ஏகாரம் அசைநிலை), மேல் நாள் - முன் ஒரு நாளில், உற்ற - உண்டான, நிகழ்ந்த, செருவிற்கு - போருக்கு, இவள் தன் ஐ - இவள் தந்தை (ஐ = தந்தை/தமையன்/ தலைவன்), யானை எறிந்து - யானையை கொன்று (எறிதல் - அழித்தல்), களத்து - களத்தில், ஒழிந்தன்னே - இறந்தான் (ஒழிந்தனனே - ஏகாரம் அசைநிலை), நெருநல் - நேற்று, உற்ற - நிகழ்ந்த, செருவிற்கு - போருக்கு, இவள் கொழுநன் - இவளது கணவன், பெரு நிரை - பெரிய பசுக் கூட்டம், விலக்கி - தடுத்து, ஆண்டுப் பட்டனனே - அவ்விடம் இறந்தான் (பட்டனனே - ஏகாரம் அசைநிலை), இன்றும் - இன்று செருப் பறை - போர்ப்பறை ஒலி, கேட்டு - கேட்டு, விருப்புற்று - விருப்பம் கொண்டு, மயங்கி - அறிவு மயங்கி, வேல் கை கொடுத்து - வேல் எடுத்து கையில் கொடுத்து, வெளிது - வெண்மையான ஆடையை, விரித்து - விரித்து, உடீஇ - உடுத்தி (அளபெடை), பாறு மயிர் - உலர்ந்த தலைமயிர், குடுமி - தலைக் குடுமியை, எண்ணெய் நீவி - எண்ணெய் இட்டு சீவி, ஒரு மகன் - இந்த ஒரு மகன், அல்லது - அல்லது, இல்லோள் - யாரும் இல்லாதவள், செரு முக - போர் முகம், நோக்கி - நோக்கி, செல்க - செல்லுக, என விடுமே - என்று அனுப்பினாள் (விடுமே - ஏகாரம் அசைநிலை)