புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு : 278
பெரிது உவந்தனளே!
பெரிது உவந்தனளே!
பாடியவர் :
காக்கைபாடினியார் நச்செள்ளையார்.
திணை :
தும்பை.
துறை :
உவகைக் கலுழ்ச்சி.
பாடல் பின்னணி :
போருக்குச் சென்ற தன் மகன், பகைவர்க்குப் புறமுதுகு காட்டி மாண்டான் என்று சிலர் கூறக் கேட்ட அவனுடைய முதிய தாய், மிகுந்த கோபம் கொண்டு போர்க்களத்திற்குச் சென்றாள். இறந்துக் கிடந்த மகன் வீர மரணம் அடைந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். அவளுடைய வீரத்தைக் காக்கைபாடினியார் இப்பாடலில் பாடுகின்றார்.
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்,
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற,
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக், . . . . [05]
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே.
பொருளுரை :
நரம்புகள் வெளியே தெரியும்படி சதை நிரம்பாத உலர்ந்த மெல்லிய தோள்கள் கொண்ட, தாமரை இலை போன்ற அடிவயிற்றினையுடைய முதிய தாய், தன் மகன் போருக்கு அஞ்சிப் புறமுதுகிட்டான் என்று பலர் கூறக் கேட்டு, ‘நெருங்கிப் போரிடும் போர்க்களத்தில் என் மகன் தோற்று ஓடினான் என்றால் அவன் பால் உண்ட என் முலைகளை அறுத்திடுவேன்’ என்று கூறிக் கோபம் கொண்டு, கையில் வாளோடு போர்க்களம் நோக்கிச் சென்றாள். அங்கு கிடந்த மறவர்கள் பிணங்களைப் பெயர்த்துப் பார்த்தபடி குருதியால் சிவந்த போர்க்களம் முழுவதையும் தேடித் துழாவினாள். சிதைந்து துண்டு துண்டாக தன் மகன் கிடப்பதைக் கண்டதும் அவனைப் பெற்ற நாளில் அடைந்ததைவிடப் பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
குறிப்பு :
பெயரா (6) - பெயர்த்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.
சொற்பொருள் :
நரம்பு - நரம்பு, எழுந்து - எழுந்து, உலறிய - உலர்ந்த, நிரம்பா - நிரம்பாத (சதை நிரம்பாத), மென் தோள் - மெல்லிய தோள்கள், முளரி மருங்கின் - தாமரை இலை போன்ற அடி வயிற்றையுடைய, முதியோள் - முதிய தாய், சிறுவன் - மகன், படை - எதிரியின் படை, அழிந்து மாறினன் - போருக்கு அஞ்சி புறமுதுகிட்டான், என்று பலர் கூற - என்று பலர் கூற, மண்டு - நெருங்கி, அமர்க்கு - போரில், உடைந்தனன் - தோற்று ஓடினான், ஆயின் - என்றால், உண்ட - பால் உண்ட, என் - எனது, முலை - மார்பு, அறுத்திடுவென் - அறுத்திடுவேன், யான் - நான், என - என்று, சினைஇ - சினந்து, கொண்ட வாளோடு - கையில் கொண்ட வாளோடு, படுபிணம் - உயிரிழந்துக் கிடக்கும் பிணங்கள், பெயரா - பெயர்த்துப் பார்த்து, செங்களம் - குருதியால் சிவந்த போர்க்களம், துழவுவோள் - தேடுகின்றவள், சிதைந்து - சிதைந்து, வேறாகிய - துண்டு துண்டாக, படுமகன் - வீழ்ந்த மகன், கிடக்கை - கிடப்பதை, காணூஉ - கண்டு (காணூஉ - அளபெடை), ஈன்ற - பெற்றெடுத்த, ஞான்றினும் - நாளைவிட, பெரிது - பெரியதாக, உவந்தனளே - மகிழ்ச்சி அடைந்தாள் (உவந்தனளே - ஏகாரம் அசைநிலை)