புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 277

சிதரினும் பலவே!


சிதரினும் பலவே!

பாடியவர் :

  பூங்கணுத்திரையார்.

திணை :

  தும்பை.

துறை :

  உவகைக் கலுழ்ச்சி.


பாடல் பின்னணி :

போருக்குச் சென்ற தன் மகன் விழுப்புண்பட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டு ஒரு முதிய தாய் பெருமையால் மகிழ்ந்து கண்ணீர் வடித்தாள். பூங்கணுத்திரையார் அவளது மறமாண்பு கண்டு வியந்து எழுதிய பாடல் இது.

மீன் உண் கொக்கின் தூவி அன்ன,
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்,
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே, கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து . . . . [05]

வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

பொருளுரை :

மீன் உண்ணும் கொக்கின் இறகுகளைப் போல் வெண்மையான நரைத்த கூந்தலை உடைய முதிய தாய், தன் மகன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகமானது. அவளுடைய கண்ணீர்த் துளிகள், வலிய மூங்கிலில் தொங்கிச் சொட்டும் மழைத் துளிகளை விட அதிகமானவை.

சொற்பொருள் :

மீன் உண் - மீன் உண்ணும், கொக்கின் - கொக்கினுடைய, தூவி - இறகு, அன்ன - போல, வால் - வெண்மை, நரைக் கூந்தல் - நரைத்த தலைக் கூந்தல், முதியோள் - முதிர்ந்த வயதினள், சிறுவன் - மகன், களிறு - யானை, எறிந்து - அழித்து, பட்டனன் - இறந்தான், என்னும் - என்கின்ற, உவகை - மகிழ்ச்சி, ஈன்ற - பெற்ற, ஞான்றினும் - பொழுதை விட, பெரிதே - பெரியது (ஏகாரம் அசைநிலை), கண்ணீர் - கண்ணீர், நோன் - வலிமையான, கழை - மூங்கில், துயல்வரும் - அசையும், வெதிரத்து - மூங்கிலில், வான் பெய - மழை பெய்ய, தூங்கிய - தொங்கிய, சிதரினும் - துளிகளை விட, பலவே - பலவாகும் (ஏகாரம் அசைநிலை)