புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 276

குடப்பால் சில்லுறை!


குடப்பால் சில்லுறை!

பாடியவர் :

  மாதுரைப் பூதன் இளநாகனார்.

திணை :

  தும்பை.

துறை :

  தானைநிலை.

நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்,
இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்,
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப், . . . . [05]

படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.

பொருளுரை :

சிறந்த மூத்த குடிமகள் ஒருத்தியின் அன்புச் செல்வன் எதிரியின் மிகப் பெரிய படையையே தோற்கச் செய்யும் போர் - மறவனாக விளங்கினான். நிறைந்திருக்கும் பெரும்பானைப் பாலில் ஆயர் - மகள் தன் கை நகத்தால் தொட்டுத் தெரித்த மோர் உறை போல எதிர்த்த பெரும்படையைக் கலங்க வைத்தான். செம்முது பெண்டு நறுமணப் பொருள்களைப் பூசாத நரைத்த கூந்தலை உடையவள். இலவங்காய் போன்று சுருங்கி வெறிச்சோடிக் கிடக்கும் முலையை உடையவள்.