புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு : 274
நீலக் கச்சை!
நீலக் கச்சை!
பாடியவர் :
உலோச்சனார்.
திணை :
தும்பை.
துறை :
எருமை மறம்.
நீலக் கச்சைப் பூவார் ஆடைப்,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து; இனியே,
தன்னும் துரக்குவன் போலும் - ஒன்னலர்
எகுடை வலத்தர் மாவொடு பரத்தரக், . . . . [05]
கையின் வாங்கித் தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து; இனியே,
தன்னும் துரக்குவன் போலும் - ஒன்னலர்
எகுடை வலத்தர் மாவொடு பரத்தரக், . . . . [05]
கையின் வாங்கித் தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;
பொருளுரை :
வன் நீலநிறக் கச்சை தன் ஆடைமேல் இறுக்கிக் கட்டியிருந்தான். இடையில் பூ போட்ட துணி ஆடை. அவனைத் தாக்க யானை ஒன்று வந்தது. அவன் தன் கையிலிருந்த வேலை முன்பே வேறொரு பகைவன்மீது வீசிவிட்டான். எனவே வீச வேல் இல்லாமல் இருந்தான். அப்போது குதிரைமேல் வந்த பகையாளி ஒருவன் அவன்மீது வேலை வீசினான். அது அவன்மேல் பாய்ந்தது. அதனைப் பிடுங்கித் தன் வலிமையையெல்லாம் உன்றுதிரட்டித் தன்னைத் தாக்கவந்த களிற்றின்மேல் வீசினான். அது சாயக்கண்டு மகிழ்ந்தான். மகிழ்ச்சியில் தானும் மாண்டான். இத்தகைய போர்முறைமையை எருமை - மறம் என்று இலக்கணம் கூறுகிறது. இதனைத் தொல்காப்பியம்.