புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு : 269
கருங்கை வாள் அதுவோ!
கருங்கை வாள் அதுவோ!
பாடியவர் :
அவ்வையார்.
திணை :
வெட்சி.
துறை :
உண்டாட்டு.
பயிலாது அல்கிய பல்காழ் மாலை,
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்,
புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை, . . . . [05]
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
பிழிமகிழ் வல்சி வேண்ட, மற்றிது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க், . . . . [10]
கொடுஞ்சிறைக் க்ரூஉப்பருந்து ஆர்ப்பத்,
தடிந்துமாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே.
பொருளுரை :
குயிலின் வாயைப்போல் அதிரல் பூவின் மொட்டு இருக்கும். அதன் மொட்டு முத்துக்களைக் கட்டிய மாலையை உன் தலையிலுள்ள பித்தை - முடியில் சூட்டினர். (மணம் இல்லாததால்) இந்த மாலையை யாரும் அணிவதில்லை (பயில்வதில்லை). புலியின் கண் போன்ற வாயினை உடைய புதிய மண்ணகல் மொந்தையில் கொண்டுவந்த நீரை மூன்று முறை (ஒன்றிருமுறை) ஊற்றினர். அதனை நீ உண்டாய். அதன் பின்னர் உவலை - மலர் மாலை அணிந்துகொண்டு துடியன் (உடுக்கடிக்கும் பூசாரி) வந்தான். பழச்சாற்றுக் கள்ளை (பிழிமகிழ்வல்சி) உண்ணும்படி வேண்டினான். நீ அதனை உண்ணவில்லை. எனவே அந்தக் கள்ளைக் காட்டி பூசை செய்தான் (வாழ்த்தினான்). நீ எப்படிப்பட்டவன் தெரியுமா? ஆனிரையாளரும், அதைக் கவர்ந்தோரும் மோதிக்கொண்ட கரந்தைப்போர். நீ ஆனிரைகளை மீட்டுத் தழுவி ஓட்டிக்கொண்டு மீண்டாய். அப்போது வில் வீரர்கள் உன்னைத் தாக்கினர். நீ உன் வலிமையான கைகளில் ஏந்திய வாளால் அவர்களைப் பருந்துக்கு இரையாக்கினாய்.