புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 265

வென்றியும் நின்னோடு செலவே!


வென்றியும் நின்னோடு செலவே!

பாடியவர் :

  சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்.

திணை :

  கரந்தை.

துறை :

  கையறுநிலை.


குறிப்பு :

  பண்ணனின் மறைவிற்குப்பின் எழுதப்பட்டது.

ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல் ஆன் கோவலர் படலை சூட்டக்,
கல் ஆயினையே, கடு மான் தோன்றல், . . . . [05]

வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க்
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே.

பொருளுரை :

ஊரை மிகவும் கடந்த, பாறைகள் நிறைந்த பாழிடத்தில், உயர்ந்த நிலையையுடைய வேங்கை மரங்களின் ஒளியுடைய கொத்தாகிய நறுமணமான மலர்களைப் பனை ஓலையால் அலங்கரித்துத் தொடுத்து, பல பசுக்களையுடைய இடையர்கள் மாலைச் சூட்டி வழிபடும் நடுகல் ஆகிவிட்டாயே நீ, விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே! வானத்தில் உள்ள இடியைப் போன்று இருந்த உன்னுடைய காலடி நிழலில் வாழும் வாழ்க்கையுடைய பரிசிலர்களின் செல்வம் மட்டுமல்லாமல், விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளைக் கொண்ட, மலர் மாலைகள் அணிந்த வேந்தர்களின் வெற்றியும், உன்னுடன் கழிந்தது.

சொற்பொருள் :

ஊர் நனி இறந்த - ஊரை மிகவும் கடந்த, பார் முதிர் பறந்தலை - பாறைகள் நிறைந்த பாழிடம், ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ - உயர்ந்த நிலையையுடைய வேங்கை மரங்களின் ஒளியுடைய கொத்தாகிய நறுமணமான மலர்கள், போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து - பனை ஓலையால் அலங்கரித்துத் தொடுத்து, பல் ஆன் கோவலர் படலை சூட்ட - பல பசுக்களையுடைய இடையர்கள் மாலைச் சூட்டி வழிபடும், கல் ஆயினையே - நடுகல் ஆகிவிட்டாயே (ஆயினையே - ஏகாரம் அசைநிலை), கடு மான் தோன்றல் - விரைந்த குதிரைகளையுடைய தலைவனே, வான் ஏறு புரையும் - வானத்தில் உள்ள இடியைப் போன்ற, நின் தாள் நிழல் வாழ்க்கை - உன் காலடி நிழலில் வாழும் வாழ்க்கை, பரிசிலர் செல்வம் அன்றியும் - உன்னிடம் பரிசு பெறுபவர்கள் செல்வம் மட்டுமல்லாமல், விரி தார்க் கடும் பகட்டு யானை வேந்தர் ஒடுங்க வென்றியும் - விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளை உடைய மலர் மாலைகள் அணிந்த வேந்தர்களின் வெற்றியும், நின்னொடு செலவே -உன்னுடன் கழிய (செலவே - ஏகாரம் அசைநிலை)