புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 264

இன்றும் வருங்கொல்!


இன்றும் வருங்கொல்!

பாடியவர் :

  உறையூர் இளம்பொன் வாணிகனார்.

திணை :

  கரந்தை.

துறை :

  கையறுநிலை.

பரலுடை மருங்கில் பதுக்கை சேர்த்தி,
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,
அணி மயில் பீலி சூட்டிப், பெயர் பொறித்து,
இனி நட்டனரே கல்லும், கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய . . . . [05]

நெடுந்தகை கழிந்தமை அறியாது,
இன்றும் வருங் கொல் பாணரது கடும்பே?

பொருளுரை :

பரல் கற்களையுடைய மேட்டு இடத்தில் மரல் செடியிலிருந்து எடுத்த நாரால் தொடுத்த சிவந்த மலர்ச் சரங்களுடன், அழகான மயிலின் இறகைச் சூட்டி, அவனுடைய பெயரைப் பொறித்து நடுகல்லை இப்பொழுது நட்டிவிட்டார்களே! கன்றுடன் கறவை பசுக்களையும் மீட்டுத் தந்து பகைவரை விரட்டிய பெரும் தலைவன் இறந்ததை அறியாது, இன்னும் அவனைக் காண வருமா, பாணரின் கூட்டம்?

குறிப்பு :

பெரும்பாணாற்றுப்படை 181-182 - மரல் புரி நரம்பின் வில் யாழ் இசைக்கும், மலைபடுகடாம் 430-431 - தளிரொடு மிடைந்த காமரு கண்ணி திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி, புறநானூறு 264 - மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு.

சொற்பொருள் :

பரலுடை மருங்கில் பதுக்கை சேர்த்தி - பரல் கற்களையுடைய மேட்டு இடத்தில், மரல் வகுந்து தொடுத்த - மரல் செடியிலிருந்து எடுத்த நாரால் தொடுத்த, செம்பூங் கண்ணியொடு - சிவந்த மலர்ச் சரங்களுடன், அணி மயில் பீலி சூட்டி - அழகான மயிலின் இறகைச் சூட்டி, பெயர் பொறித்து - பெயரைப் பொறித்து, இனி நட்டனரே - இப்பொழுது நட்டினரே (நட்டனரே - ஏகாரம் அசைநிலை), கல்லும் - நடுகல்லும், கன்றொடு கறவை தந்து - கன்றுடன் கறவைப் பசுக்களையும் மீட்டுத் தந்து, பகைவர் ஓட்டிய நெடுந்தகை - பகைவரை விரட்டிய பெரும் அண்ணல், கழிந்தமை அறியாது - இறந்ததை அறியாது, இன்றும் வருங் கொல் பாணரது கடும்பே - இன்னும் வருவார்களா பாணரின் சுற்றத்தார் (கடும்பே - ஏகாரம் அசைநிலை)