புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 263

களிற்றடி போன்ற பறை!


களிற்றடி போன்ற பறை!

பாடியவர் :

  பெயர் தெரியவில்லை.

திணை :

  கரந்தை.

துறை :

  கையறுநிலை.

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,
வண்டுமேம் படூஉம், இவ் வறநிலை யாறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து, . . . . [05]

கல்லா இளையர் நீங்க நீங்கான்,
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்,
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

பொருளுரை :

களிற்றியானையின் காலடி போன்ற பறையை முழக்கிக்கொண்டு உதவுபவரை நாடிச் செல்லும் இரவலனே, வழியில் உள்ள நடுபல்லைத் தொழாமல் சென்றுவிடாதே. அது கரந்தைப் போரில் ஆனிரை மீட்டுக்கொண்டு வரும்போது பெருகிவரும் வெள்ளத்தைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள கல்லுச் சிறை (கல் அணை) போல் தடுத்து வென்று பகைவர் வில்லின் அம்பில் மூழ்கி மாண்டவனின் நடுகல். அது அறநிலை ஆறாக நின்றவனின் நடுகல். மீட்கப்பட்ட ஆனிரை தம் தொழுவத்துக்குச் செல்கையில் அதன் பின்னே கல்லா இளையர் செல்கையில் தான் மட்டும் செல்லாமல் தனி ஒருவனாகத் தடுத்து நின்று பட்டவன் நடுகல். தொழுது செல்லுங்கள்.