புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 262

தன்னினும் பெருஞ் சாயலரே!


தன்னினும் பெருஞ் சாயலரே!

பாடியவர் :

  மதுரைப் பேராலவாயர்.

திணை :

  வெட்சி.

துறை :

  உண்டாட்டு (தலை தோற்றமுமாம்).

நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்;
ஒன்னார் முன்னிலை முருக்கிப், பின்நின்று;
நிரையோடு வரூஉம் என்னைக்கு . . . . [05]

உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

பொருளுரை :

என் ஐ (தலைவன்) பகைவர் தாக்குதலை முறுக்கி எறிந்துவிட்டு ஆனிரைகளைக் கவர்ந்து ஓட்டிக்கொண்டு வருகையில் ஆனிரைகளுக்குப் பின்னே (மீட்க வருவோரை மறுக்குவதற்காக) வந்துகொண்டிருக்கிறான். அவனுடன் அவனுக்குப் பக்கமாக இருந்தவர்களும் (உழையோர்) வருகின்றனர். அவர்களைக் காட்டிலும் என் தலைவன் பொலிவுற்றுக் காணப்படுகிறான். அவனுக்காக. நறவுக்கள் பானையைத் திறந்து வையுங்கள், ஆட்டுக்கடாய்களை வெட்டிச் சமைத்து வையுங்கள். பச்சை இலைகளை மேலே பரப்பிப் பந்தல் போடுங்கள். ஆற்று ஊற்றுநீர் கொண்டுவந்த ஈர இளமணலைப் பந்தலில் பரப்பி வையுங்கள்.